பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு.கு. ஜகந்நாதராஜா 17: பெண்ணினத்தின் பேரழகில் பிள்ளைகளின் மழலைதனில் எண்ணமதைப் பறிகொடுத்தே ஏங்கியேங்கி திற்கின்றேன் இதனைப் படிக்கும் போது அழகு எங்கெங்குள்ளது? என்று பாவேந்தர் பாரதிதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாடல்கள் ஒன்றில் அழகென்டாள் கவிதை தந்தாள் என்ற இறுதியடினை நினைக்கின்றோம். இந்த அழகைச் சுவைப்பதில் ஒரு நீதியையும் அறிந்து கொண்டதாகக் கூறுவது மிகமிக அற்புதம், எட்டாத துரத்தில் இருக்கின்றவன்மலர்கள் தொட்டாதாம் இன்புற்றோம் துர்யமனமலர்களிலும் கிட்டாத பொருள்டோலக் கீழ்மைமனப்பற்றுகளை விட்டாலே நலமன்றேன் விடல்வேண்டும் என்றுணர்த்தேன். என்ற பாடலில் பற்றற்ற நிலை யைக் காட்டுகின்றார். அந்த நிலையை நம்மனமும் அவாவி நிற்கின்றது. இந்திர கோபம் என்ற பூச்சி ஒன்றுண்டு, மழைக் காலங்களில் அவற்றைக் காணலாம். இரத்தினம் போல் ஒளிரும் செந்நிறத்தவை. அதனைப் பற்றிவரும் பாடல்களில் சில, இந்திர கோபங்காள் எந்தவிதமாக யந்திர வெல்வெட்டின் அந்துகில் போர்த்தீரோ செம்பருத்திப்பூவின் செம்மை பிழிந்தெடுத்து உம்பர் உனக்காக ஒருடலைத்தந்தாரோ? இயற்கை அன்னையவள் இளந்தளிர்வெற்றிலையை நயப்பாக்குடன்மென்று நன்குமிழ்ந்துவிட்டாளோ?