பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர்கள் ثاتی ہ** ు போலப் பரவி வருகின்றனவாம். என்ன மாயத்தினாலோ சூடு த்தகைய ஒளியுடன் அக்காட்சியில் சதலைக் கண்டு மகிழலாம். இதைத் தான்

தேனாக்கி என மிகவும் இங்கிதமாக நாமும் அக் காட்சி இன்பத்தில் மூழ்கி அதனை

கவிஞன்தான் அநுபவித்தவற்றை நம்மையும்

சொல்வளம்: கருத்துகளை உணர்த்தவும், கற்பனைத் திறனை வளர்க்கவும் பயன்படுவன சொற்களே. இவையே அடிப்படைக் கூறு. சொல்வளம் சிறந்தால்தான் கவிதைகள் சிறக்கும். நன்னூலார் பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூல்முடியு மாறு என்று கூறியிருத்தலைக் காணலாம். உரைநடையில் ஆளப்பெறும் சொற்களுக்கும் கவிதையில் ஆளப்பெறும் சொற்களுக்கும் வேற்றுமை இல்லை. கவிஞன் அந்தச் சொற்களைக் கையாளும் முறையில்தான் அந்த வேற்றுமை உள்ளது. ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய நேரான பொருளைத் தவிர வழிவழியாக அந்தச் சொற்கள் ஆளப் பெறும் இடங்களின் தொடர்பால் அவற்றுடன் சேர்ந்தமைந்த கருத்துக்களும் உள்ளன. அன்றியும் சொற்கள் தமக்கென்று அமைந்த ஒலித் தன்மையும் வல்லின மெல்லின எழுத்துக்களுக்கு ஏற்ப உணர்ச்சியுடன் சேர்ந்து ஒலிக்கும் தன்மையும் பெற்றுள்ளன. எனவே கவிதையில் சொற்கள் அமையும் பொழுது இடத்திற்கேற்றவாறும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறும் கலைக்கு ஏற்றவாறும் அவை அமைந்து கவிதையைப் பொலிவுடையதாக்குகின்றன. இச் சொற்கள் மேற்கூறியவாறு கையாளுவது கவிஞனின் திறனைப் பொறுத்தது. அவனது மேதைத் தன்மையையும் பொறுத்தது. கம்பன் போன்ற கவிஞர்கள் சொற்களைக் கையாளும் முறைக்கும் சாதாரணக் கவிஞர்கள் சொற்களைக் கையாளும் முறைக்கும் மலையனைய வேறுபாடு உண்டு. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களின் கவிதை இயற்றும் திறனைக் குறித்து ஒருபாடல். என்ைவைத்தி எனைவைத்தி எனப்பதங்கள்