பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. டாக்டர். ச. சவகர்லால் செட்டி நாட்டில் பெரும்புகழ் வாய்ந்த கவிஞர்களில் இவரும் ஒருவர். காரைக்குடியில் பிறந்து 1938). தேவகோட்டை தே பிரித்தோ உயர்நிலைப்பள்ளியில் தற்போது மேல்நிலைப்பள்ளி பள்ளிக்கல்வியும், அழகப்பர் கலைக் கல்லூரியில் எம். ஏ. பட்டமும், மதுரைகாம ராசர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டிபட்டமும் பெற்று.28 ஆண்டுகள் கல்லூரித் தமிழ்ப் போராசிரிய ராகவும். ஓராண்டு கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்று 1994 சென்னையில் குடியேறித் தம் மக்களின் அரவணைப்பில் வாழ்கின்றவர். கல்லுரியில் பயின்ற நான் தொட்டே கவிதை இயற்றி வருபவர். தவத்திரு குன்றக்குடி அடிகனாரால் பொற்கிழிக் கவிஞர் என்ற பட்டம் பெற்றுச் சிறந்த கவிஞராக அறிமுகம் செய்யப்பெற்றவர். இவர் இன்றுவரை கவியரங்குகள், இதழ்கள், மலர்கள் போன்றவற்றில் வெளியிட்ட கவிதைகள் யாவும் இன்னும் நூல் பெறவில்லை. ஒரே ஒரு நூல் சில ஆண்டுகட்கு முன்னர் வெளிவந்துள்ளது.இவர் பாடிய அனைத்தும் மரபுக் கவிதைகளேயாகும். இவற்றையொட்டி யாப்பு நெறிக்குட்பட்ட புதியவகைப் பாடல்களும் இவர்தம் படைப்புகளில் உள்ளன. இனி இவர்தம் கவிதைகளை நோக்குவோம். முருக வழிபாடு டாக்டர் ச. சவகர்லால் இறையன்பு மிக்கவர். குறிப்பாக முருகன் மீது அதிக பக்தி கொண்டவர். கந்தனெனும் மந்திரத்தைச் சொனன்துமே காதவழி பறந்துமிக ஒடுமே- என்றும் சொந்தமென வேலனடி சொன்னதுமே - சொல்பவர்க்குச் சீர்மிகுந்து செல்வமெல்லாம் கூடுமே ! வள்ளிமண வாளனென்று சொல்லிமிக அன்புகொண்டு வந்திடுவோர் துன்பமெலாம் மாயுமே - நெஞ்சை அள்ளுகின்ற கொள்ளையழ குள்ளமகன் கந்தனவன் அடியிரண்டில் தலையதனைச் சாயுமே! என்பவை புதுவகைப் பாடல்கள். அடுத்து வேறொரு பாணியில், கையிலே வேலுண்டு கண்ணிலே அழகுண்டு கவலை யொழிந்தி டாதா - பையவே சேர்கின்றோம் பாதமே நேர்கின்றோம் பயமெலாம் தொலைந்தி டாதா