பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,3 i. s அ. சவகர்னல் & அள்ளுகின்ற கவியணங்கை ஆட்டு வித்தான் அவளோடக் கலைவனத்தைக் கூட்டு வித்தான் வல்லவனாம் பெருங்கம்பன் ஆட்டு விக்க வளர்கவிதை தங்கையவள் நடன மாடும் சொல்மண்டபம் அதில் சுவை மேடை அதில் கந்த சொல்லணங்கு ஆடுகின்றாள். அணிகள் என்னும் அணங்கு நடக்கின்றான். கவியணங்கின் பிரவேசம், அவள் ஆடவே கலைவளங்கள் வந்து குவியும் நிலையில் கவிதை நங்கை நடனம் ஆடுகின்றாள். இந்தக்கற்பனை நடன அரங்கில் நாமும் இருந்து கவிதை மங்கை நடனமாடுவதைக் கண்டு களிக்கின்றோம். எல்லாம் மான சீகமாகத்தான். இன்னும் கம்பன் என்னென்ன வளங்களைக் காட்டுகின்றான். என்று கவிஞர் காட்டுவதைக் காண்போம். நாட்டுவளம் காட்டுவித்தான், செல்வ மிக்க நகரவளம் காட்டுகின்றான், மதை ராடும் ஆட்டவளம் காட்டுகின்றான் அதன்துட் பத்தை அழகுபெறக்காட்டுகின்றான். மழலை வெல்லும் பாட்டுவளம் காட்டுகின்றான், மதன்து தர்கள் பயில்வளத்தைக் காட்டுகின்றனன், சுருங்கச் சென்னால் காட்டுவளம் அத்துணையும் காட்டி விட்டசன் காணாக்கால் நம்கண்ணின் பார்வை தப்பு. பொருள் வெளிப்படை விளக்க வேண்டியதில்லை. விளக்கம் தெளிவில்லையாயின் மீண்டும் ஒரு முறை படியுங்கள் விளக்கம் தெளிவாகும். அண்ணல் காந்தி வயதான காலத்திலும் காந்தியடிகள் வேகமாகவே நடந்தார். ஆகவே அவரைப் பாட்டிலும் வேகமக நடக்க விடுகின்றார் கவிஞர் கத்தியும் இரத்தமும் மெத்த இழிவெனக் கத்தி முழக்கியதார்? - மெய்ச் சத்தியம் நித்தமும் சக்தி தருமெனச் சாற்றி முழக்கியதார்? அண்ணல் காந்தியென் றெண்ணிடு போதில் ஆடுது நெஞ்சமெலாம் - அவர் எண்ணி லுயர்வினை எண்ணி மகிழ்வினில் ஏறுது நெஞ்சமெலாம்.