பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. சவகர்லால் 岱、 பாவேந்தரின் பூதவுடல் மறைந்தாலும் அவர்தம் புகழ் உடல் என்றும் மறையாது தமிழ்நாட்டில் இயற்றையழகு இருக்கும் வரையிலும் அவர்தம் அழகின் சிரிப்பாக என்றும் நிலைத்து தம் புகழ்நிறீஇ தாம் மயந்து பெரியோரில் ளு ஒருவராக இருப்பார் என்று கவிஞர் சவகர்லால் அடித்துக் கூறுகின்றார். இயற்கை : இயற்கையைப் பாடாத கவிஞர்கள் இல்லை. சங்க இலக்கியங்கள், சமய இலக்கியங்கள்.பக்தி இலக்கியங்கள், காவியங்கள் இவற்றிலெல்லாம் இயற்கை வருணிக்கப் பெறுவதைக் காணலாம். பாவேந்தரின் அழகின் சிரிப்பு ஒர் அற்புத இயற்கைக் களஞ்சியம். அதிலுள்ள தொடக்கப் பாடல்கள் பிற்காலக் கவிஞர்கட்கு அடியெடுத்துக் கொடுக்கின்றன. 2. இயற்கை மண்ணில் அழகு பற்றி எழிலைக் கண்டேன்' என்ற தலப்பில் மூன்று கவிதைகளை அழகாகப் பாடியுள்ளார். புலர்ந்திடு பொழுதில் வானிற் பறந்திடு புள்ளிற் கணலை மலர்ந்திடு பூவில் தேனை மாந்திடு வண்டின் கூட்டம் கிளர்ந்திடு ஒலியிற் கீச்சுக் குரலிடு கிள்ளைப் பேச்சில் அலர்ந்திடு கமல மொட்டின் அசைவினில் எழிலைக் கண்டேன் மடிதனை முட்டிப் பாலை மண்டியே தாயை விட்டுக் கடிதினில் ஒடி மீளும் கன்றதின் செய்கை தன்னில் மிடிதனில் உழன்று வாழ்வை வெறுத்திடு தாயர் உள்ளம் நொடிதனில் மாற்றும் சேயன் தெளிப்பினில் எழிலே கண்டேன் இரண்டுப் பாடல்கள் மட்டும் ஈண்டுக் காட்டப் பெற்றன. மலர் : நந்தவனத்திலும் இளமரக்காவிலும் பல்வேறு வண்ண மலர்கள் மாலையில் மலர்ந்திருக்கும் காட்சி கண்ணுக்கு இனிமையானது, கற்பனைக்கு விருந்தாக அமைவது, மனத்திற்கு அமைதியை நல்குவது. மலர்களைப் பற்றி ஐந்து பாடல்கள். அனைத்தும் அற்புதமானவை.