பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

必 இடையிடைநின் றிர, இனிவைப்பம் து வேண்ட இனிவைப்பம் பொறுத்திடுமின் பொறுத்திடுமின் என்று கூறி தினைவுற்ற ஒருகடிகைக் களவில்கவித் தொடைதொடுத்து நிமலர் பூனப் புனைவுற்ற மீனாட்சி சுந்தரவன் வலைப்போல்வார் புவியில் யாரே. இது மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் திருநாடு அலங்கரித்ததனை நினைந்து பாடிய இரங்கற்பா. சொற்கள் யாவும் அகராதியினின்றும் புறப்பட்டு நம்மூர் கிருஷ்ணன் கோவிலில் சுண்டல் வாங்கும் சிறுவர்கள் பல்வேறு வரிசையில் நிற்பதுபோல, தேன்கூட்டில் தேனீக்கள் பல வரிசைகளில் நிற்றல் போல பல்வேறு வரிசைகளில் நின்று என்னை வையுங்கள், என்னை வையுங்கள், என்று கெஞ்சி வேண்டுகின்றனவாம். பிள்ளையவர்கள். இதோ வைக்கிறேன். இதோ வைக்கிறேன், பொறுங்கள் என்று அமைதி கூறுகின்றாராம். இந்தக் காட்சியை நம் மனத்திரையில் கண்டு அமைத்து மகிழ்வோம். சதுரங்க ஆட்டத்தில் காய்கள்தாம் இருக்கும் இடத்திற்கேற்ப ஆற்றல் பெறுவன போலவும் துப்பாக்கியில் தோட்டாக்கள் அமையும் போது ஆற்றல் பெறுவன போலவும் கவிதையில் சொற்கள் தாம் இருக்கும் இடத்திற்கேற்பப் புதிய பொருள்களைப் பெறுகின்றன. இலக்கிய வழக்கிலும், உலக வழக்கிலும் உள்ள எல்லாச் சொற்களுக்கும் உயிர் உண்டு, வாழ்க்கை உண்டு, வாழ்க்கை வரலாறும் உண்டு. பண்டைய இலக்கியங்களில் நிரம்பப்பயிற்சியும், தன் காலத்து வழங்கும் மொழி பற்றிய மிக ஆழ்ந்த அநுபவமும், தன் ஆன்மாவுடன் ஒன்றிக் கலந்துவிட்ட தமிழுணர்ச்சியும் உள்ள கவிஞனுக்குத்தான் சொற்களின் உயிர்த் தத்துவம் நன்கு புலப்படும். இத்தகைய கவிஞனிடம் தான் அவன் நினைத்தவுடன் வேண்டும் பொழுது சொற்கள் அவனது மனக்கண்முன் தோன்றி தம்மைத் தாமே அளித்து ஏவல் கேட்டு நிற்கும். ஓர் எடுத்துக் காட்டால் இதனை விளக்கலாம். பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா பேசும்பொற் சித்திரமே அள்ளிய னைத்திடவே - என்முன்னே ஆடிவரும் தேனே. இதில் பிள்ளைக் கனி யமுது. பேசும் பொற்சித்திரம், ஆடிவருந்தேன்