பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* £, வாழும் கவிஞர்கள் தண்ணொளி இரவையே ஆளுவதேன்? - அந்தப் பொன்னொளி காலையில் மாறுவதேன்? வெண்ணகை காட்டிய நீலவானம் - காலை வெறுமையாய்த் தோன்றிடு நிலையதுமேன்? காலையில் கதிரவன் தோன்றுவதேன்? - பொய்கைக் கமலம் குறுநகை பூப்பதுமேன்? மாலைக் கதிரொளி மாய்வதுமேன்? - அல்லி மலர்களும் செவ்வெனச் சிரிப்பதுமேன்? புள்ளினங் காலையில் எழுவதுமேன்? - பகற் போதினி லெங்கனும் பறப்பதுமேன்? மெள்ளென அந்தியிற் கூடுவந்தே - பின்பு மேனி சுகம்பெறத் துங்குவதேன்? இந்த நான்கு பாடலில் எழுப்பிய வினாக்களுக்கு அடுத்துவரும் இரண்டு பாடல்களில் விடையாகத் தத்துவ உண்மையையே தருகின்றார் கவிஞர். வாழ்வது வும்திலை தாழ்வதும் - இந்த வாழ்வி லியற்கையென் றோதிடவே ஆழ்கடல் விட்டெழு கதிரவனும் - மாலை அடுக்கிய மலைதனில் விழுகின்றான். இயற்கை திகழ்ச்சிக ளத்துணையும் -வாழ்வை எடுத்துரைத் திடத்தான் நிகழ்வதுமே செயற்கை தலமெதும் நிலைத்திடாமல் - வாழ்விற் சுழன்றிடும் என்பதை உணர்ந்திடவே. இவற்றிலுள்ள நிலையாமை என்ற உண்மையைக் கண்டு பயன் பெறுவோம். மழையணங்கு வள்ளுவப் பெருமான் வான்சிறப்பைத் தம் குறளில் காட்டுவார். கவிஞர் சவகர்லால் மழையை அணங்காக உருவகித்து அதன் அற்புதப் பண்புகளைக் காட்டுவார். அவற்றினை ஈண்டுக் காண்போம். காவடிச் சிந்து பாணியில் கவிதை நடைபோடுகின்றது. &: வாடிப் பயிரெலாம் நீடிக் கருகையில் வந்து பொழிந்திடுவாய் - நலந் தந்து மகிழ்ந்திடுவாய் - எனச் சிந்தை வணங்கிடுவோம் - எமை நாடிப் பொழிகிலாய் ஒடி யொளிகுவாய் நன்று சிரித்திடுவாய் - இடியாய்