பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. சவகர்லால் 187 நின்று நகைத்திடுவாய் - மலையுட் சென்று மறைந்திடுவாய் ஆசை துடித்திட ஒசை நடுக்குற அங்கம் பதறிடுவாய் - மின்னற் செய்கை உதறிடுவாய் - இடியாய் எங்கும் கதறிடுவாய் - உன்றன் ஆசைக் குரியவன் மோசம் புரிந்தானோ ஆகிய உண்மையென்ன? - சிந்தை போகியதன்மையென்ன?-மழை ஆகிய பெண்ணனங்கே ! மழையின் தன்மையை அற்புதமாகக் காட்டுகின்றது கவிதை. வெள்ளக்காட்சி : சில பகுதிகள் ஈண்டு தரப் பெறுகின்றன ஊழியின் கூத்தினுக் கரங்கமென - இடிதான் ஒத்திசை மத்தள முழங்கியதே பாழென இப்புவி யாகிடுமோ - என்னப் பதறிட மழையது பொழிந்ததுவே, கவிஞரின் கற்பனை உளமெனவே - தமிழ்க் காவலர் கொடைத்திற நலமெனவே புவியினி லெங்கனும் வெள்ளமதே - தோன்றிப் பொங்கிட வழிந்தது ஆற்றினிலே இலைகளுந் தளிர்களும் காய்களுமாய் - மலர்ந்த இன்மணம் பூக்களும் கனிகளுமாய் குலைகளும் முறிந்தநற் கிளைகளுமாய் - ஆற்றில் குவிந்திட நீர்பொழில் ஆனதுவே பள்ளமும் மேடென ஆகிடவே - சில பள்ளமே மேடதை விழுங்கிடவே கள்ளமும் நல்லதும் போரிடுமோர் - உண்மைக் காட்சியின் நலத்தினைக் கண்டேனடா புள்ளினம் விண்ணிலே பறப்பதுவும் - நாணற் புல்லின மதைக்கண் டாடுவதும் வெள்ளமே காட்டிடும் காட்சியடா - அதை வேறெதிற் கண்டிடக் கூடுமடா. அற்புதமான வருணனையைக் கவிதையில் கண்டு மகிழ்ந்திடலாம். 3. இயற்கை - விண்ணில் 1. கதிரவன் : காலையில் எழுஞாற்றின் அழகையும் மாலையில் படுஞாயிற்றின் பாங்கையும் கம்பனில் கண்டு மகிழலாம். கவிஞர்