பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. சவகர்லால் 1833 நாடிங்குக் கருமேகப் போர்வையினுள் நல்லுறவை மறைத்து நெஞ்சம் ஆடிவிழச் செய்கின்றாய் இதுநன்றோ? ஏனிந்த ஆட்ட மெல்லாம்? இந்த இரண்டு பாடல்களிலுள்ள கற்பனை நயம் தன்மைநவிற்சியில் சிறப்பாக மிளிர்வதைக் கண்டு களிப்பெய்துகின்றோம். 3. நடப்பு நிலை : இத்தலைப்பில் பல்வேறு நிலைகளைக் காட்டுவார். மறுபடியும் வருவாய் நீ என்ற தலைப்பில்.காந்தியடிகளைப் பற்றி பொக்கைவாய்ச் சிரிப்பில் இந்தப் பூமியே மயங்கக் கண்டாய் மக்களின் துன்பம் போக்க மேனியை வருத்திக் கொண்டாய் தக்கபல் நெறிகள் கூட்டித் தந்தையே தந்தாய் உன்றன் மக்களோ மறந்து விட்டோம் மறுபடி வருவா யாநீ ! என்ற பாடலில் அறிமுகம் செய்து அரசியல் வாழ்வில் தூய்மை அறத்தொடு வாழ்ந்தாய் பின்னால் வருபவர் தமக்குத் துய வழிமுறை சொன்னாய் இன்றோ அரசியல் நாறிப் போச்சு அறநெறி மறந்து போச்சு மறுபடி பாடஞ் சொல்ல மகாத்மா வருவா யாநீ ! என்றுநடப்புநிலைகளை எடுத்துக் காட்டுவாார். மேலும் புதிர்க்கதிர் (x. Ray) படம்போல் வெட்ட வெளிச்சமாக்குவார். சாதிகள் சிரிக்க லாச்சு சண்டைகள் பெருகிப் போச்சு நாதியில் ஏழைக் கூட்டம் நாடெலாம் பரவிப் போச்சு வீதிகள் வஞ்சப் பேச்சு வெடிப்பினில் தகர லாச்சு மீதியும் அழியு முன்னே மறுபடி வருவா யாநீ