பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 வாழும் கவிஞர்கள் சேராதார் குத்திக் கொள்ளவார் சொந்தமோ பகையைக் கூட்டும் சாதிகள் கொலைகள் செய்யும் தலைவரோ கட்சி சேர்ப்பார் விதிக ளெங்கும் கட்சி முழக்கமோ வெறியை யூட்டும் காதலாய் எம்மைக் காணக் கருணையே வருவா யாநீ. எளிய சொற்கள், தெளிவான கருத்துகள் அடங்கிய அறுசீர் ஆசிரிய விருத்தங்கள் அற்புதமாக அமைந்து படிப்போரை அன்புடன் அழைக்கின்றன. 'வருவாயா நீ என்ற தலைப்பில் கவிஞர் சமூக நிலையைக் காட்டுகின்றார். இதன் நிலையை பாரதியார்'நெஞ்சு பொறுக்குதிலையே என்று பாடினார். விடுதலை பெற்ற பிறகு சமூக நிலையைக் காண அப் புதுமைக் கவிஞரை அழைக்கின்றார் காரைமாநகர்க் கவிஞர். விடுதலை கெட்டு நாட்டின் வண்ணமும் கெட்டு மக்கள் கெடுதலை அடையக் கண்டாய் கிளர்ந்தெழும் உணர்ச்சி கொண்டாய் துடித்தெழுந் தார்க்கப் பாட்டைத் துடியென முழக்கி நின்றாய் விடுதலை வளத்தைக் காண மறுபடி வருவா யாநீ ! நாட்டிலே உயிரை வைத்தாய் நாள்தொறும் கொட்டித் தந்த பாட்டிலே உணர்வை வைத்தாய் பண்பெனும் விளைச்சல் தன்னை நாட்டிலே காண ஏங்கி நல்லுளம் துடித்த வள்ளல் நாட்டுள களைகள் காண நாடியே வருவா யாநீ ! கீதையைச் சொன்ன மாயக் கண்ணனும் நபியும் ஏசும் மாதினைப் பாகம் வைத்த வள்ளலும் ஒன்றே என்ன