பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{92 வாழும் கவிஞர்கள் 11. கவிவேந்தர் கா. வேழவேந்தன் இவர் சென்னையை அடுத்த செங்கையைச் சேர்ந்தவர். செங்கை மாவட்டத்தில் பொன்னேரி அருகில் ஒரூரில் பிறந்தவர் (1936), தொடக்கக் கல்வி பயின்ற நாள் முதல் தமிழில் ஆர்வமிக்கவராகத் திகழ்ந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று பி.ஏ.(B.A) பட்டமும், சட்டக்கல்லூரியில் பயின்று பி.எல் (B.L.)பட்டமும் பெற்றவர். சிறந்த வழக்கறிஞர். தொடக்ககால தி.மு.க. ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றியவர். இளமை முதல் தமிழில் ஆர்வங்காட்டிப் பயின்றதால் கவிதை இயற்றும் பண்பு கருவிலே திருவாக அமைந்தது. இப்போது அரசியலை விட்டு ஒதுங்கி தொழில் நடத்தி வருபவர். வேழவேந்தன் கவிதைகள் ', "தூறலும் சாரலும், வண்ணத்தோகை', 'ஏக்கங்களின் தாக்கங்கள் என்ற நான்கு கவிதைத் தொகுதி நூல்கள் வெளியிட்டவர். இறுதியாகக் குறிப்பிட்ட நூல் என் பார்வைக்கு வந்ததால் அதிலிருந்து இவர்தம் கவிதைத்திறனை எடுத்துக்காட்ட முற்படுகின்றேன். கவிதை இலக்கணம் நன்கு அறிந்த சிறந்த மரபுக் கவிஞர் என்பதை முதலில் குறிப்பிடுகின்றேன். அகவல், அறுசீர், எண்சீர் ஆசிரிய விருத்தங்கள் புனைவதால் சிறந்த கவிஞராகத் திகழ்கின்றார். பாவேந்தர் பரம்பரையில் ஒரு முதன்மைக் கவிஞராக இருந்து வருகின்றார். 1. தமிழ்ப் பற்று இவர்தம் தமிழ்ப் பற்றைப் பல்வேறு இடங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில் பாடிய கவிதைகளிலிருந்து தெளியலாம். "நாநடனம் ஆடுதற்கே நட்டுவனார் ஆடுகின்ற ஞானத்தமிழ்" என்று தமிழைப் பாராட்டுவதிலிருந்து இதனை முதலில் அறியலாம். 1. கவிதையைப் பற்றி : எல்லா மொழிகளிலும் கவிதையே பாட்டே முதன்முதலாகத் தோன்றியதாக ஆய்வாளர்கள் கருதுவர். நெல்லால் வயிற்றுப்பசி தீரும், கவிதையால் மூளைப்பசி தீரும் என்பார் வேழவேந்தன். கவிதைஎன்றால் என்னகவிதை? அறிவுத் தோட்டம் கழனிவிதை அவையன்றோ? உழும்பாட் டாளி புவிமண்ணில் விளைவிக்கும் நெல்லால் இங்கே புயப்பசிதான் பறந்தோடும் ! கவிப்பாட் டாளி