பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. வேழவேந்தன் 193 சுவைசுவையாய் விளைவிக்கும் கவிதைச் சொல்லால் சுடர்மூளைப் பசியன்றோ நீங்கும் நாட்டில் அவையேறிப் பாடிவந்த புலவர் இன்றேல் அன்றிருந்த வரலாறும் தெரிவ துண்டா? இளங்கோ இல்லையென்றால் கண்ணகியின் கற்பும், சாத்தனார் இல்லையென்றால் மணிமேகலையின் மேன்மையும், காளிதாசன் இல்லையென்றால் சகுந்தலையின் அழகும், ஹோமர் இல்லையென்றால் அளவிலாப் பேரழகி ஹெலனைப் பற்றிய வரலாறும் எப்படித் தெரியும்? தெரியாதன்றோ? இன்னும் கூறுவார். எங்கேயோ மறைந்திருந்து செவிகள் கேட்க இசைஎழுப்பும் சில்வண்டைப் பாடு வோன்யார்? எங்கேயோ வான்முகட்டில் கண்சி மிட்டும் எழில்மீனைப் பாராட்டிப் பாடு வோன்யார்? எங்கேயோ ஒளிந்திருக்கும் கடலின் முத்தை எடுப்பதற்குத் தூண்டியிங்கே பாடு வோன்யார்? சிங்காரக் கவிஞனன்றோ? அவன்கண் ணோட்டம் செல்கின்ற தொலைதுாரம் சொல்லப் போமோ? பிறிதோர் இடத்தில் செந்தமிழின் சிறப்புக்கோ இனிமை வாயில் என்பவர், துடிப்பான கவிதைக்கோ கருவே வாயில் ' என்பார். தமிழ்க் கவிதை நமக்கென்றும் தெவிட்டாத பொங்கல் என்பார் மற்றோர் இடத்தில், 2. ஊர்ப்பெயர் மாற்றங்கள் : ஒரு காலத்தில் தமிழ்ப் பெயரை வடமொழிப் பெயராக மாற்றினார்கள். இது வடமொழிமேல் வந்த மோகம் வேற்று நாட்டார் தம் வாயில் நுழையாத தமிழ்ப் பெயர்களை தம் உச்சரிப்புக்கேற்பச் சிதைத்து வழங்கினர். ஆங்கிலேயர்கள் 'தரங்கம்பாடியை டிரங்கு பார்க் என்று வழங்கினர். அதனைச் சீராய்ப்படியாத மாணவன் டிரங்குபெட்டி செய்ய இருக்கின்ற ஊர் என்று சொன்னதாகக் கவிஞர் ஒரு நகைச்சுவையை உதிர்க்கின்றார். தரங்கம்அலை, அலை வந்து பாடும் ஊர் என்று பொருள் தெரியுமாறு 'தரங்கம்பாடி என்ற பெயர் வழங்கினதாக விளக்கம் தருவார் கவிஞர் தூத்துக்குடி டுடிகோரி என்றாயிற்று, பின்னர் பழைய நிலைக்கே மாற்றப்பட்டது. குடுமியாமலை சிகாகிரி என்றாயிற்று. வில்முனைதனுஷ்கோடி, ஏழுமலை-சப்தகிரி, திருமறைக்காடு-வேதாரண்யம், மன்னார்கோயில்-மன்னார்குடி என்பனவெல்லாம் பழைய நிலையை எய்திட நடவடிக்கை எடுக்கப்பெறுதல் வேண்டும்.