பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 வாழும் கவிஞர்கள் ஆழ்கடலின் கண்ணாடிமேகந்தன்னை அருவமென்றே ஏன்சொன்னார்?நிறமே இல்லாச் சூழ்கடலின் நீருக்கே நீல வண்ணம் தொகுத்தளித்த உன்றனுக்கா உருவம் இல்லை? எத்தனைஎத் தனைவடிவில் மேகந் தன்னை எழுதாத துரிகையால் எழுது கின்றாய்? பொத்தலுள்ள குடையாநீ? துற்ற லாலே பூமண்ணைக் குளிரவைத்தச் சிரிக்க வைத்தாய்? கத்துகின்ற இடியெங்கே ஒளித்து வைத்தாய்? கண்வெட்டும் மின்னலெங்கே மறைத்து வைத்தாய்? இத்தனையும் மழைப்பெண்ணின் திரும ணத்தில் எழில்கூட்டும் வாணவெடிக் காட்சி யாமே? மென்மையுள்ள மாரியினால் பயிரை யெல்லாம் விழிமூடி அழியாமல் காக்கின் றாயே? வன்செயல்கள் நிகிழ்த்துகின்ற புயலை நீயேன் வழிகட்டி அனுப்புகின்றாய்? நீதிதானா? இன்மணத்துத் தாழையுடன் பூநா கத்தை இணைத்ததுபோல் இரண்டினையும் இணைத்ததேன்?ஏன் கண்சிமிட்டும் விண்மீன்கள் எரிந்து வீழும் காதையினை அடிக்கடிஏன் காட்டு கின்றாய்? உண்டான இவ்வுடலம் உடுக்க ளைப்போல் ஒர்நாளில் வீழுமென்றா உணர்த்து கின்றாய்? பாடல்களில் அற்புதமான படிமங்கள் தென்படுகின்றன. சொல்நயமும் பொருள் நயமும் கைகோத்து ஆடுகின்றன. தமிழ்க் குழைவும் நெஞ்சைக் குழைவிக்கின்றது. இதுகாறும் விண்ணில் சில காட்சிகளைக் கண்டோம். இனி மண்ணிலும் கவிஞர் காட்டும் சில காட்சிகளைக் காண்போம். இதோஇங்கே நீங்கள்நிற்கும் பூமிக் கோளம் எப்போதும் ஒய்வின்றிச் சுழலா விட்டால் அதோ அங்கே இரவேது? பகல்தான் ஏது? அண்டத்தின் உயிர்களுக்கே வாழ்க்கைஏது? இதோஇங்கே மலையருவி ஆறாய் மாறி இளைப்பாற நேரமின்றி நடக்கா விட்டால் அதோஅங்கே வயற்பயிர்கள் சிரிப்ப தேது? அன்றாடம் நம்வயிறு நிறைவ தேது? கவிஞரும் நாமும் இந்தச் சுழலும் உருண்டையான பூமியில்தான் இருக்கின்றோம். பூமி சுழலுவதால் இரவு பகல் உண்டாகின்றன என்பதை விளக்குகின்றார். அருவி ஆறாய் மாறி நடப்பதால் தான் வயல் சிரிக்கின்றது. நம் வயிறும் நிறைகின்றது என்கின்றார்.