பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 வாழும் கவிஞர்கள் தனிமனத்தைத் தந்தன்றே மாள்கின் றீர்கள் ! தத்துவத்தின் பதவுரையாய் இருக்கின் றீர்கள்! அல்லி என்றும் தாமரைகள் என்றுமிங்கே அகிலத்தில் பலபெயரில் தோற்றம் பெற்றி ! துல்லியநல் நிலவோ னை மணக்கும் அல்லி சுடர்உமிழும் கதிரோ'னைக் கண்டு விட்டால், மெல்லிதழின் முகம்முடிகற்பைக்காப்பாள்; மிகஉயர்ந்த இப்பண்பை மறப்ப துண்டோ? எல்லோர்க்கும் மகிழ்வூட்டும் மலர்க ளே! ஏன், இறப்பினையும் உடன் சேர்த்தே பிறக்கின் றீர்கள்? அற்புதமான கற்பனைகள். முல்லைக்குத் தேர் தந்த பாரியின் வரலாறு பொருத்தப் பெற்றிருப்பது அற்புதம்! அல்லியின் கற்பு நகைச்சுவையினை நல்கும் கற்பனை. (ஆ) மாங்கனிகள் : முக்கனிகளில் ஒன்று மாங்கனி. இனிப்போடு புளிப்பினையும் இழைத்தே வந்த ஒரு கணி. பழுக்கும்போதே அது தனித்தங்க நிறமெடுத்துத் தகதகக்கும். அதனைத் தொலைவில் கண்டாலும் நுனி நாக்கில் சுவை நீரை ஒட வைக்கும். கவிஞர் கூறுவார். எத்தனையோ பழங்களிங்கே விளைந்த போதும் ஏக்கமுடன் மேல்நாட்டார் ஆண்டுக் காண்டு மெத்தஉனை விரும்புவதேன்? பெருமை யோடு விமானத்தில் பறக்கின்ற மேன்மை பெற்றாய்! தித்திக்கும் மழலையதன் பிஞ்சுக் கன்னம் தீங்கனியே உன்னைப்போல் மென்மை என்றே முத்திரையைப் பதிக்கின்றார் கவிஞர் எல்லாம் மொத்ததில் வசந்தபெண் "சீரே நீதான் ! பாட்டை மீண்டும் மீண்டும் படித்தால் மாம்பழத்தை உண்பது போல் இனிக்கின்றது. (இ) கோடை : ஆங்கில முறைப்டி காலப்பிரிவில் நான்கில் ஒன்று, தமிழ் முறைப்படி காலப்பிரிவில் ஆறில் ஒன்று. குளிர் நாட்டிலிருந்து வந்த ஆங்கிலேயர்கள் வெயில் தாங்காமல் கோடையில் தங்குமிடங்களாக ஆக்கப் பெற்றவை. உதகமண்டலமும் கொடைக் கானலுமாகும். கோடையைப் பற்றி எட்டுக் கவிகள், சிலவற்றைக் காட்டுவேன். கோடையே மண்ணின் மீது கொதிப்பேற்றும் காலப் பெண்ணே !