பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 வாழும் கவிஞர்கள் இசைகின்றான் ! காலை ஒரம் இருக்கின்ற தொழிலா ளிக்கே அவைபோட வருமா னத்தை ஆம்நீயே தருவாய் தாயே! எளிமையான அருமையான பாடல்கள். வருணனையோடு சில செய்திகளையும் சேர்த்துக் கவிதைகட்குப் புதுமெரு கூட்டுகின்றார் கவிஞர். ஈ) வானம்பாடி அழகான பறவையல்ல. இதற்கு மயில் போன்ற எழில்தோகை இல்லை, அன்னத்தின் நடையும் இல்லை, கிள்ளையின் கணிப் பேச்சுமில்லை, மனிதனையே தூக்கிச் செல்லும் பருந்துடலும் இல்லை. ஆனால் இது மக்கள் மனத்தில், எண்ணத்தில், பாராட்டில் நிலையான இடம் பெற்றிருப்பதற்குக் காரணம் என்ன? இதன் சிறு தொண்டையினின்றும் வெளிவரும் இதயம் கவரும் பாட்டு தான். கவிஞர் கூறுவார். - முகிலரங்கில் மேடையினை அமைத்துக் கொண்டு மோகஇசை பாடுகின்ற வானம் பாடிக் ககனத்துக் கவியரசே! வான கத்தில் கட்டணம்ஏன் வைக்காமல் பாடு கின்றாய்? அகில்மணத்தால் முக்கெல்லாம் மகிழும், உன்றன் அற்புதத்துப் பாட்டுக்கோ செவிகள் ஏங்கும், முகம்சிரித்த மகிழம்பூ சிறிதென் றாலும் முழுமனத்தைத் தருவதுபோல் இசைக்கின் றாயோ! கவிஞர் அங்கு வானம்பாடியைக் ககனத்துக் கவியரசாகக் காண்கின்றார். காசு வாங்காத கச்சேரியைக் காண்கின்றார். நலம்பாடும் எழிலுற்றே! நீயோ பாட்டால் நாட்டோரின் நெஞ்சையன்றோ பறித்துச் சென்றாய்? பலகவிஞர் கற்பனைக்கே விதைநீ யன்றோ? பறவையெலாம் உன்சிறப்பைப் பெற்ற துண்டா? கவிஞரின் கற்பனைக்கு வானம்பாடி தான் வித்து என்றதாகக் கவிஞர் கூறுவது அற்புதம், தொடர்ந்து, நெடுங்காத தூரத்தில் பறக்கும் உன்றன் நேர்மூச்சோ எங்களுக்கே கவிதை மூச்சு ! என்று முத்தாய்பாகப் பேசுவது மேலும் அற்புதம்.