பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. வேழவேந்தன் 20% 3. சொல் - சிந்தனை விளையாட்டு ஒரு சில சமயங்ளில் கவிஞர் ஒரு சொல்லை எடுத்துக் கொள்வார். அதில் தம் சிந்தனையைப் பாய்ச்சிக் கற்பனை உலகுகட்கே சென்று விடுவார். சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன். 1. வாயில் இத்தலைப்பில் வரும் ஐந்து பாடல்களும் மிக அற்புதமானவை. சில சிந்தனைத் தெறிப்புக்களைக் காட்டுவேன். சிந்தனைக்கோ உயர்முளை வாயில் மண்ணின் செழுமைக்கோ மழையேதான் வாயில் நல்ல சிந்துநடைப் பேச்சுக்கோ எடுப்பே வாயில் சிங்காரப் பாட்டுக்கோ குரலே வாயில் துடிப்பான கவிதைக்கோ கருவே வாயில் தொல்லையிலா முகத்துக்கோ சிரிப்பே வாயில் நடிப்புக்கோ முகபாவம் வாயில் நல்ல நடனத்தின் வெற்றிக்கோ அடியே வாயில் படிப்புக்கோ அரிச்சுவடி வாயில் உள்ள பசிதானே உழைப்பூரின் முதலாம் வாயில் நூலுக்கோமுகப்புரைதான் நுழைவு வாயில் நுரையருவி ஆற்றுக்கே தொடக்க வாயில் வாலறிவன் முயற்சிக்கோ கேள்வி வாயில் வணக்கந்தான் அடக்கமெனும் பண்பின் வாயில் வேல்விரர் வெற்றிக்கோ உறுதி வாயில் விஞ்ஞானம் உலகத்தை மாற்றும் வாயில் நடிகைக்கோ விளம்பரமே வாயில் இல்ல நங்கைக்கோ நாணந்தான் பெண்மை வாயில் கடிகார மணிச்சத்தம் கால வாயில் கனிமழலை அன்னைக்கோ இன்ப வாயில் நடுநிலைமை ஒன்றேதான் நீதி வாயில் நாநயம்தான் வாணிகத்தின் வருவாய் வாயில் எடுப்பான ஒவியத்தில் வண்ணம் வாயில் என்றென்றும் வெற்றிக்கோ உழைப்பே வாயில் இந்தக் கவிதைகளில் சிந்தனையும் கற்பனையும் கவிஞரின் கூரிய அறிவும் கை கோத்து ஆடுவதைக் கண்டு மகிழலாம். 2. முகப்பு: இத்தலைப்பின் கீழ் மூன்று பாடல்கள் உள்ளன. மூன்றும் முத்தான மணிகள் மூன்றையும் காட்டுவேன். மின்னல்களே மழைமேக முகப்பு துள்ளும் 哆 வெள்ளலைகள் கடற்கிழவன் முகப்பு வீட்டின்