பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபுக் கவிதை 3 குலமதலாய், குனிவில் ஏந்தும் மல்லணைந்த வரைத்தோளா, வல்வினையேன் மனம்.உருக்கும் வகையே கற்றாய் மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றுஇனிப்போய் வியன்கான மரத்தின் நீழல் கல்லனைமேல் கண்துயிலக் கற்றனையோ கசகுத்தா கசிய கோவே ! என்ற குலசேகர ஆழ்வாரின் பாசுரத்தை உள்ளங் கனிந்து ஒதுங்கால் ஆழ்வார் தான் தசரதனாக இருந்து புலம்பும் முறையில் பாடியதை போலவே நாமும் தசரதனாகி விடுகின்றோம். இதையே உளவியலார் ஒட்ட உணர்தல் (sympathy) என்று குறிப்பிடுவர். செவி ஒலி நயத்தை உணரத் தொடங்கியதும் நம் கற்பனையை உணர்ந்து பாசுரத்தின் உணர்ச்சியைப் பெறத் தொடங்கி விடுகின்றது. لا ஒலிநயம் விளக்கம்:- பாட்டை உரக்கப் படிக்கும் பொழுது பாட்டிலுள்ள ஒலிகள் இயங்குகின்றன. அந்த இயக்கத்தில் ஏற்படும் ஒழுங்கே ஒலிநயம் எனப்படுவது. வண்ணம். சந்தம் என்பனவும் ஒரு வகையில் ஒலி நயத்தைத்தான் குறிப்பிடுகின்றன. "இழுமென் மொழியால் விழுமியது நுவலல்" என்று தொல்காப்பியர் கூறுவதும் இதுவேயாகும். 'இழும் ' என்பது ஒசையளவில் நின்று பொருளுணர்த்தும் ஓர் ஒலிக்குறிப்புச் சொல் போலாகும். இந்த அழகிய ஒலிக்குறிப்பு கவிதைக்கு இன்றியமையாது வேண்டப் பெறும் ஓர் உறுப்பாகும். ஒலிகளுக்கு மூன்று தன்மைகள் உண்டு, ஒன்று ஒலியின் கால அளவு, அதனால் அமையும் நீட்டல் குறுக்கல் வேறுபாடு. இரண்டு - ஒலியின் தன்மை, வன்மையாகவும், மென்மையாகவும் ஒலிக்கும் வேறுபாடு. மூன்று - ஒலிக்கும் முறை. எடுத்தும் படுத்தும் நலிந்தும் ஒலிக்கும் பொழுது உண்டாகும் அழுத்த வேறுபாடு. இந்த மூன்று கூறுகளும் பல்வேறு அளவிலும் வகையிலும் சேர்ந்து உண்டாகும் ஒலி விகற்பங்களையே நாம் ஒலிநயம் என்று வழங்குகின்றோம். இசைக்கலையில் இது அமையும் நிலை வேறு. முன்னதில் அஃதுஅடிப்படையாக உள்ளது. பின்னதில் தேவையான அளவிற்கு நுட்பமாக விளங்குகின்றது. இங்குக் கூறியவற்றால் ஒலிநயம் என்பது சொற்களால் விளக்கக் கூடியதன்று என்பதும் அது புலன்களால் உணரக் கூடியதொன்று என்பதும் தெளிவாகும்.