பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. வேழவேந்தன் 2O7 என்ற பாடலால் திருக்குறள் நுவலும் பொருளைச் சுருக்கமாக அறியலாம். திருக்குறள் நெஞ்சில் ஏறின் சிறைச்சாலை குறையும் தூய திருக்குறள் பரவு மானால் சறுபகை உணர்வு மாயும் இருக்கின்ற நூல்க ளுக்குள் இஃதொன்றே பொதுமைச் சட்டம் என்ற பாடலால் இது பொதுறை என்பதை வற்புறுத்தினார். 2. இன்னும் எத்தனை நாட்களோ?. இத் தலைப்பில் குறள் அறம் காட்டப் பெறுகின்றது. உள்ளுவவெ லாம்உயர்வாய் இருத்தல் வேண்டும் ஒழுக்கந்தான் மனிதனுக்கே உயிராம் என்றே வள்ளுவரும் பலகுறளில் குரல்கொ டுத்தார் வாய்வலிக்கக் கூறுகின்றோம். . இக்காலத்தில் திருக்குறள் விளம்பரப் பொருள் ஆகி விட்டது. ஓரளவாவது ஒரு சிறிது அறத்தையாவது பின்பற்றுபவர் அரியராகவே காணப்படுகின்றனர். 3. இளந்தளிரே இத் தலைப்பில் சிறுவர்கட்கு அறிவுரை கூறும் பாங்கில் கருத்து மொழியப்பட்டுள்ளது. படிப்பறிவே மூலதனம் குறள்நூல் கூறம் பண்புகளே உமைக்காக்கும் கேடயங்கள் துடிப்புமிகு சிந்தனைதான் வாழ்க்கை ஒடத் துடுப்பாகும், அன்பொன்றே கடவுள், பாழும் குடி, சூது பொய், களவு பொறாமை என்னும் கொடும்பேய்கள் உமைநாட விடக்கூ டாது. நல்ல அறவுரைதான். பிஞ்சு உள்ளம் கட்டாயம் பின்பற்றும் 4. எங்கே அந்த நாள்? : இத்தலைப்பில் வரும் இறுதிப் பாடல் பலநூறாம் ஆண்டுகட்கு முன்னே தோன்றிப் பண்பாளர் போற்றுகின்ற குறள்தான் இந்தத் தொல்லுலகில் பொதுச்சட்டம் ஆயிற் றென்ற சுவைச் செய்தி வாராதா? எங்கே அந்நாள்? என்ற கவிஞரின் ஏக்கம் காணலாம். 5. வள்ளுவர் வெறுத்த ஓவாப் பிணி இத்தலைப்பில் சாகாத முப்பாலால் சட்டம் செய்து சரித்திரத்தில் தமிழினத்தை உயர்த்தி விட்ட