பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 வாழும் கவிஞர்கள் திகழ்பவர்கள். இன்று அவரிடம் பல நிகழ்ச்சிகளில் பாடிய பாடிய பாடல்கள் சுமார் பத்தாயிரம் உள்ளன. அவை வணக்கம் வாழ்த்து, அரங்கம். மழலை. மலர்கள், அஞ்சலி, பிற என்ற தலைப்புகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார். 'நகரத்தார் என்ற தலைப்பில் நால்வர் பாடல்கள் நூலாக வெளிவந்துள்ளது. அந்நால்வர்களில் இவர் ஒருவர். தவிர வடவேங்கடமும் திருவேங்கடமும் என்ற ஒரு நூலை (மே,1992) வெளியிட்டு அதனைச் சீர்திருத்தச் செம்மல், அமரர். சொ. முருகப்பாவுக்கு அன்புப் படையலாக்கினேன். வெளியீட்டு விழாவில் அவர்தம் துணைவியார் திருமதி மரகதவல்லி அம்மையார் பெற்றுக் கொண்டார். அந்நூலுக்கு டாக்டர். அர. சிங்கார வடிவேலன் சிறப்புப் பாயிர மாலையாகப் பதினொரு பாடல்கள் பாடியுள்ளார். இவற்றைக் கொண்டு இப்பெருமகனாரைச் சிறந்த கவிஞர் என்பதைக் காட்ட முயல்வேன். ஒரு பானை சோற்றுக்கு ஓரிரு பருக்கைகளைக் கொண்டு பதம் காட்ட முடியுமல்லவா? நகரத்தார் குடும்பம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் பேராசிரியர், டாக்டர்.அர.சிங்கார வடிவேலனார் மகளாக நின்று பாடியதில் சில பகுதிகள். தேவகோட்டை என்னும் தெய்வத் திருநகரில் சேவுகனார் கல்லூரித் திணைப்புனத்தில் கவிவிரட்டும் கல்வியென்னும் வள்ளி கைபிடித்த வடிவேலன் புள்ளி மயிலின்றிப் புறப்பட்டு வந்துள்ளேன் சிங்கார வடிவேலன் தேவைக்குத் தக்கபடி சிங்காரி ஆவேன் சிறிது. அற்புதமான இந்த அறிமுகம் சிறிய கலிவெண்பாவால் அமைந்து கவியரங்கத்தில் கூடி இருப்போருக்கு மிக்க மகிழ்ச்சியூட்டியிருக்கும். சிங்காரி(மகள்)கவியரங்கத் தலைவர் மீதே கண்வலை வீசுகின்றாள். மாப்பிள்ளை விலையேறிப் போன தாலும் மகளாகிக் கவிபாட வந்த தாலும் பூப்படைந்து மாமாங்கம் ஆன தாலும் புதுமனையில் வாழ்வுபெறத் துடிப்ப தாலும் மாப்பிள்ளை போலிருக்கும் தலைவர் ஐயா மனைவியரை விட்டிங்கே தனியாய் வந்தீர்