பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 வாழும் கவிஞர்கள் வீட்டுக் குலமகள் முதிர் கன்னியாகவே இருக்கும் பரிதாப நிலையைக் கவிஞர்அவலந் தோன்றக் கூறுவார். பாட்டு மகளின்றிப் பாவிநான் நம்குலத்தில் வீட்டு மகளானால் வேதனைக்குத் தாயாவேன் கற்பனையில் ஆகாமல் காட்சி மகளானால் விற்பனைக்கே ஆளாகும் விதிப் பொருளாவேன் உள்ளத்தால் மகளன்றி உருவத்தால் மகளானால் தள்ளிவிட நாள்பார்க்கும் தாய்தந்தை சுமையாவேன் இந்நிலைக்குக் காரணம் கூறிக் கவிஞரே வினா எழுப்பி விடையும் தருகின்றார். மாளாதா செல்வ மனையிற் பிறந்தவர்கள் ஆளாகி மணக்காமல் அலைதற்குக் காரணமென்? நகரத்தார் திருக்குலத்தில் நாலைந்த பெண்பிறந்தால் தகரத் கதவும் தங்காது போய்த்தொலையும் பட்டம் பலவெனினும் பதவி பெரிதெனினும் கட்டுதற்குப் பெண்கள் காத்திருந்தால் நிலைகுறையும், அடுத்தடுத்துப் பெண்பிறந்தால் அலுமினியக் குவளையில்தான் எடுத்துப் பருக இல்லாள் இசைந்திடுவாள். செட்டிக் குலத்தில் செலவென்று சொன்னாலும் பெட்டையெனச் சொன்னாலும் பெயரிரண்டு பொருளொன்றே திருமணம் பொருளாதாரத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றது என்ற நிலையை அற்புதமாகக் காட்டுவார் சிங்கார வடிவேலனார். பொருளாதாரச் சீர்கேட்டிற்குக் காரணம் பர்மாக் கடையெல்லாம் பாய்விரித்துப் படுத்ததேயாகும், இதனையும் கூட்டி உரைக்கின்றார். இளைஞர் சமுதாயமும் இந்நிலைக்கு காரணமாகின்றது என்றும் கூறுவார். இக்கால இளைஞரெல்லாம் இனக்கவர்ச்சிச் சுகத்துக்குப் பக்காவில் பொன்னைப் படியளக்க வேண்டுகின்றார் துடிப்புக்குத் தக்கபடி தோளழகு பாராமல் படிப்புக்குத் தக்கபடி பணத்தளவு பார்க்கின்றார் தன்வீட்டில் ஆச்சிகளைத் தள்ளிவிடும் நெருக்கடியால் பெண்வீட்டில் வாங்குகிற பேரங்கள் பேசுகின்றார் கால அறிவின்றிக் கல்யாணம் செய்வதனால் ஏலப் பொருளாகி இளைஞர்விலை ஏறுகிறார் காளை விலையேற்றம் கன்னியர்க்குக் கல்யாண வேளைவர ஒட்டாமல் வேலியிட்டுத் தடுக்கிறது