பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர சிங்கார வடிவேலன் 213 என்று கூறி இரக்கப்படும் கவிஞர் முத்தாய்ப்பாகச் செட்டிக்குலத்துத் திருமகளின் அவலத்தை சுட்டிக் உரைக்கக் கம்பனுக்கும் முடியாது என்று ஒருபோடு போடுகின்றார். மேலும் இந்த அவல நிலைக்கு அழாத நிலையாகக் குறைப்படுகின்றார். தன்னை மகளாகவே நினைத்துக் கொண்டுபாடுவதால் நாமும் அந்த நிலையை அடைந்து விடுகின்றோம். செட்டி குலத்துத் திருமணத்தின் முறையாலே துட்டுக்கும் கேடாகித் திட்டுக்கும் ஆளானோம் மாட்டுக்குக் கூட மகளாகப் பிறந்திருந்தால் நாட்டுக் கிடேரியென நல்லவிலை போயிருப்பேன் ஆட்டுக்கு நானும் அன்பு மகளானால் வீட்டுக்கு வந்து விலைகொடுத்துப் பெற்றிருப்பார் மேட்டுக் குடியென்று மேலான குடியென்றும் நாட்டார்கள் போற்றும் நகரத்தார் திருக்குடியில் பெண்ணாக நானும் பிறப்பெடுத்த காரணத்தால் மண்ணாகி நித்தம் மாளாமல் சாகின்றேன் இந்த நிலைக்குக் காரணம் என்ன? காலத்திற்கேற்ற முறையை மேற்கொள்ளாமை, "கவிகளாகுவர் காண்குவர் மெய்ப்பொருள்"என்று கம்பன் கூறுவான், டாக்டர் சிங்கார வடிவேலனார் ஒரு கவிஞர் ஆதலால் உண்மையைக் காணுகின்றார், கூறுகின்றார், நம்குலம் வாழ வேண்டின் நம்மனம் மாற வேண்டும் பெண்குலம் வாழ வேண்டின் பிள்ளைகள் மாற வேண்டும் தம்குலம் வாழ வேண்டின் தம்பியர் திருந்த வேண்டும் எம்குலம் வாழ வேண்டி இறைவனை வணங்கு கின்றேன். நாம் என்ன முயன்றாலும் நம் உள்ளிருக்கும் இறைவன், பரந்தாமன் பாதை காட்டியது போல் நமக்கு வழிகாட்டவேண்டும்.இதுதான் கவிஞர் காட்டும் நேர்வழி. நகரத்தார் பண்பாடு: என்ற தலைப்பில் திரு ஆவினன் குடியில் அன்னதானச் சத்திரத்தில் 6-2-74 அன்று இரவு 10 மணிக்குக் கவிஞர் டாக்டர், அரசிங்கார வடிவேலனார் தலைமையில், பழநிக் கோயில் அருளாடியார் திரு. சுப பழநியப்பர் முன்னிலை வகிக்க, பாடப் பெற்ற தலைமைக் கவிதையிலிருந்து சில பகுதிகள்.