பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 வாழும் கவிஞர்கள் செல்விருந்து ஒம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்த வர்க்கு (குறள்-86) என்பது வள்ளுவர் வாக்கு. இந்தப் பண்பை அசோக வனத்தில் சிறையிருந்த சீதாப் பிராட்டியின் வாக்கில் வைத்துப் பேசுவான் கம்ப நாடன். - அருந்து மெல்லடகு ஆரிட அருந்துமென் றழுங்கும் விருந்து கண்டபோது என்னுறுமோ வென்று விம்மும் விருந்தாக வருவோரைச் செட்டியார் வாங்க இருங்க என்று கூறி வரவேற்பதையும்உடனே ஆச்சி என்ன சாப்பிடுlங்க-சூடாகவா, குளிர்ச்சியாகவா என்று கேட்பதை இன்றும் நாம் காணலாம். நகரத்தில் குடியேறினாலும் நகரச் சாயம் ஏறாமல் இன்றும் ஆச்சிமாரிடம் அந்த உபசரிப்பு மிளிர்வதைக் காணலாம். . வாங்க வாங்கவென வரவேற்றத் தடுக்கிட்டுத் தாங்கி விருந்தோம்பல் தருமத்திற் சிறந்தகுணம் இருந்து பொருள்தேடி எழுந்திருக்கும் இலைபோட்டு விருந்தோம்பிச் சுவைப்பதிலே வெல்லத்தைச் சுவைப்பவர்கள் என்று விருந்தோம்பல் சிறப்பைக் கவிஞர் பாடுவார். விருந்தோம்பலில் செட்டி நாட்டுச் சிறப்பாக வெள்ளைப் பணியாரம் என்று ஓர் அற்புதமான பொருள் பரிமாரப்படும். வேறு எங்கும் காண முடியாத பொருள் இது. வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கும், திருமணம், சாந்தி போன்ற நிகழ்ச்சிகட்கு வரும் விருந்தாளிகளுக்கும் வெள்ளையப்ப உபசரிப்பு சிறப்பாக தனிப்பட்ட பெருமையுடன் திகழும். செட்டியார்களின் முக்கியத் தொழில் கொடுக்கல் வாங்கலாகும். இதில் நாணயம் என்ற பண்பில் உயர்ந்து விளங்கியவர்கள். நாணயத்தால் தொழில் சிறக்கும், நாணயத்தால் தனி மனிதப் பெருமை புனிதமாகப் போற்றப்படும். என் இளமைக் காலத்தில் இப்பண்பால் நான் பெற்ற பெருமையை இன்றும் நினைவு கூர்கின்றேன். அதனால் மேலும் மகிழ்கின்றேன். அதனைப் பன்னி உரைக்கில் பாரதமாக விரியும். இனி செட்டி மக்களின் நாணயத்தைக் கவிஞர் வாக்கில் வந்தவண்ணம் காட்டுகின்றேன். : நாநயத்தைச் சோற்றினிலும் நாணயத்தைத் தொழில்களிலும் பாநயத்தைப் போலப் பரவி வளர்ப்பவர்கள் இல்லம் இடிந்தாலும் எந்தநிலை வந்தாலும் சொல்நரையா நாணயமே சொத்திற் பெரிதாகும்