பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர சிங்கார வடிவேலன் 217 சீட்டாடித் தோற்றாலும் செலவெழுதச் சொல்லாமல் நோட்டெழுதித் தந்து தோட்டம் இழப்பவர்கள் என்ற கண்ணிகளில் செட்டிமக்களின் நாணயத்தைப் பார்க்கலாம் அடுத்து ஆச்சி - செட்டி மகன் உரையாடல் பற்றிச் சுவைபடப் பாடிக் காட்டி நம்மை மகிழ்விப்பதைக் காண்வோம். கட்டிவந்த ஆச்சியுடன் செட்டிமகன் பேசுகையில் கட்டித் தயிராகக் காதல் உறைந்திருக்கும் என்று காட்சி தொங்குகிறது. காட்சி ! "ஏங்கிறேன் என்று இல்லாளை அவரழைப்பார் 'என்னங்கிறேன் என்றே இனியபதில் மனையுரைப்பாள் தாங்கிறேன்' என்றே சமர்த்தாக அவருரைப்பார் 'சரிங்கிறேன்' என்றே சட்டென்று பதிலுரைப்பாள் காட்சி 2 கப்பலுக்குப் போகக் காத்திருக்கும் கணவரிடம் ஒப்பரிய காதல் உரைக்கும் ஒருகாட்சி ஒருகணக்கு முடிந்தவுடன் ஒய்ந்திருக்கும் செட்டிமகன் மறுகணக்கும் செல்ல மனக்கணக்குப் போட்டபடி திண்ணையிலே பாய்விரித்துத் திண்டிலே சாய்ந்திருப்பார் கண்ணாளன் தனைமறந்து கப்பலேறப் போவதனைச் சொல்லாமல் ஆச்சி சுறுக்காய்ப் புரிந்துகொண்டு செல்லமகன் சின்னவனைச் சிணுங்கவிட்டுத் தொட்டிலிட்டு ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ சீராளா கண்ணே சீமான் திருக்குமரா யாரடித்தார் ஏனழுதாய் அடித்தாரைச் சொல்லியழு யாரும் அடிக்கவில்லை ஐவிரலும் தீண்டவில்லை தானாய் அழுகின்றான் தம்பிதுணை வேணுமென்று மானான கண்ணை மணவாளன் மேல்விரிப்பார் அந்தரங்க ஆசைதனை ஆராரோ தாலாட்டில் வந்திறங்கச்செய்த வக்ணையைப் புரிந்துகொண்டு செட்டியார் தொலைப்பணயம் சிறிதுநாள் தள்ளிடுவார் தொட்டில் வரிசை தொடரவழி செய்திடுவார் என்ற இருசாட்சிகளும் காதல் இரகசியத்தைக் கண்டு மகிழலாம்.