பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 வாழும் கவிஞர்கள் வட வேங்கடமும் திருவேங்கடமும் என்ற ஆய்வு நூலை எழுதி வெளியிட்டேன். என்னுடைய நூலில் நானறிந்த பெரியவர்கள், நண்பர்கள், வகுப்புத் தோழர்கள், என்மாணவர்கள் இவர்கள் அணிந்துரை பெறுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவன். மேற்குறிப்பிட்ட இந்த நூலுக்குச் சிறப்புப் பாமாலை வழங்குமாறு வேண்டியதற்கேற்ப சிங்காரவேலர் ஒன்று வழங்கினார். நூல் அமராவதி புதுர் சீர்திருத்தச் செம்மல், அமரர், சொ.முருகப்பனாருக்கு அன்புப் படையலாக்கப் பெற்று, விழாவில் வெளியிடப் பெற்று. அவர்தம் அருமைத் துணைவியார் திருமதிமரகதவல்லி அம்மையார் திருக்கரதல் நேரில் சேர்ப்பிக்கப்பெற்றது (1992), அப்பாமாலையிலிருந்து சில கவிதைகள். . எப்போதும் ஏதேனும் எழுதிக் கொண்டும் எழுபத்தா றகவையிலும் படித்துக் கொண்டும் ஒப்பாய்வும் உறழாய்வும் செய்து கொண்டும் ஒருநூறு அடையும்வரைஉழைத்துக்கொண்டும் மப்புடைய கார்முகிபோல் கருத்தைக் கொட்ட மடிதட்டி முந்துகின்ற என்றன் ஆசான் சுப்புரெட்டி யாரென்று பெயர்சொன் னாலே சுறுசுறுப்பும் பேருழைப்பும் துள்ளு மாமே. அம்பதுக்கும் அறுபதுக்கும் இடைப்பட் டாண்டில் அழகப்பர் பண்ணையிலே தமிழை நட்டார் நெம்புகோல் விஞ்ஞானம் கற்ற ஆசான் நெடுமாலின் திருவருளால் தமிழைச் சேர்ந்தார் அம்பலத்தில் ஆடாமல் அறைக்குள் ஆய்ந்தே அறிவுலகப் பல்துறையில் நூல்கள் யாத்தார் சம்பளத்தை நம்பாமல் ரெட்டி யாரும் தம்பலத்தை நம்பியுயர் செட்டி யாரே. அன்னைமொழி அவருக்குத் தெலுங்கென் றாலும் ஆதிமொழி தமிழ்தன்னில் மேதை யானார் திண்ணைமொழி தேசமொழி உலக மெங்கும் திகழுமொழி அனைத்திலுமே தேர்ச்சி மிக்கார் எண்ணம்மொழி செயல்யாவும் பெருமாள் என்றே இலக்கியத்தில் ஆழங்கால் படுவ தாலே கன்னமொழி இனிப்பதுபோல் ரெட்டி யாரின் கையசைவும் நூலாகிய இனிக்கு தம்மா.