பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர. சிங்கார வடிவேலன் 213 வெறுந்தரையில் குப்புறத்தான் படுத்துக் கொள்வார் விரித்தபடி பலநூல்கள் உடனி ருக்கும் குறுந்தொகையும் நெடுந்தொகையும் அணியும் யாப்பும் கோள்நிலையும் வானிலையும் கூறும் நூலும் மருந்தியலும் உளவியலும் காதற் பாங்கும் மடைதிறந்த வெள்ளம்போல் தலையில் நின்று அருந்துகின்ற பாலாகிக் கையில் பாயும் அத்தனையும் தேனாகி நூலாய் மாறும். என்ற பாடல்கள் என்னை அறிமுகம் செய்யும். அடுத்து, நூல்களை அறிமுகம் செய்யும் பாங்கில், ஆழ்வார்கள் பாசுரத்தில் முழ்கி மூழ்கி ஆழங்கால் படுவதவர் பிறவிப் பேறு வாழ்விக்கும் கருவிதரும் விஞ்ஞா னத்தில் வாய்த்திருக்கும் பேரறிவு கல்விப் பேறு ஆழ்வாரில் தலைமணியாம் நம்மாழ் வாரை அருகணைய வாய்த்ததுவோ ஆய்வுப் பேறு பால்வார்க்கும் தாய்போலத் துறைகள் தோறும் பலநூல்கள் அவர்யாத்தல் தமிழர் பேறே. என்ற பாடல் பொதுவாக என்னுடைய பல நூல்களை அறிமுகம் செய்யும். அணிந்துரை பெறும் வடவேங்கடமும் திருவேங்கடமும் என்ற நூலை அறிமுகம் செய்யும் பாங்கில், வேங்கடத்தை நடுவாக வைத்துக் கொண்டு வெகுகாலப் பட்டறிவை வழங்கு கின்றார் வேங்கடந்தான் எம்பெருமான் வாழும் வீடு வேங்கடமே எனநினைக்க வாய்க்கும் வீடு வேங்கடத்தான் இலக்கியத்தில் காலம் தோறும் விளங்குவதை அழகாக விரித்துப் பேசி வேங்கடத்தான் திருவடியில் சார்த்தும் மாலை வெகுநேர்த்தி யாய்விளங்கும் இந்த நூலே. இவ்வொருநூல் படித்தாலே என்ன என்ன எய்திடலாம் என்பதனைச் சுருங்கச் சொல்வேன் செவ்வையுறு வாழ்வுவரும், வைண வத்தில் தெளிவுவரும், ஈட்டுரையின் தேன்கி டைக்கும் திவ்வியமாம் பிரபந்தத் திரட்டுப் பாலும் திருமாலின் அருளோடு சேர்ந்து கிட்டும் ஒவ்வொருசொல் பிழையாக அச்சா னாலும் உயர்திருமால் செளலப்பியம் இந்த நூலே