பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 வாழும் கவிஞர்கள் தண்டமிழின் இனிமையெனத் தழைத்து வாழ்க தனிப்பார்வைப் பேராசான் நெஞ்சம் வாழ்க. அருமையான எண்சீர் விருத்தங்கள், கம்பீரமான நடை, இத்தகைய நடையை இராமலிங்க வள்ளலிடம் காணலாம். பாவேந்தரிடமும் கண்டு மகிழலாம். புரட்சி உணர்வைக் காட்டுதற்கு ஏற்றவை. 1. சில பொருள்கள் சந்தர்ப்பங்களுக்கேற்ப வாய்ப்புக் கிடைத்த போது சில பொருள்களின் மீது கவிதைகள் தொடுத்துள்ளார். அவை பற்றி ஈண்டுக் காண்போம். நான்கு. இந்த எண் பற்றி ஓர் அற்புதமான கவிதை. முதற் கவிதையில் கூட்டல், கழித்தல், பெருக்கல் என்ற நான்கும் கூறப்பெறுகின்றன. - கொள்ளையெனக் கொடுமையெனக் கொலையும் என்னக் கொள்கையெனக் குறியென்னக் கொள்வார் தாமும் உள்ளமெலாம் ஒன்றாகி உணர்வொன் றாகி ஊருக்கும் தெரியாத உறவைக் கண்டு மெள்ளவரும் மனச்சொல்லை மேலாய்க் கொண்டு வேண்டுகின்ற செயலறியத் தருவ தெல்லாம் உள்ளபடி நான்குசுவர் அறைகள் அன்றோ உள்நடக்கும் செயலெல்லாம் உணர்வார் உண்டோ?. நன்றாக ஒடுகின்ற நலத்தைக் கண்டால் 'நான்குகால் பாய்ச்சல்தான் எனச்சொல் கின்றோம் நன்மைபல காண்பதற்கு நாடி நின்றால் 'நான்குபேர் சொல்லக்கேள் எனச்சொல் கின்றோம் நன்றிமிகு நினைவோடு நாமும் நின்றால் 'நாலுவார்த்தை சொல்லிரோ எனக்சொல் கின்றோம் தவறான வாழ்வதனை முடித்த பின்னர் 'நாலுபேர்க்கும் நன்றி.பல எனச்சொல் கின்றோம். 5ஆவது கவிதையில் நான்கு கணங்கள் வல்லினம், மெல்லினம், இடையினம், உயிரினம் தேவகதி, மக்கட்கதி. நரககதி, விலங்குகதி நான்கும், ஆசுகவி, சித்திரகவி, வித்தாரகவி, மதுரகவி, நான்கும் 6ஆவது கவிதையில் ஆண்மகனுக்கு அறிவு நிறை, ஓர்ப்பு. கடைப்பிடி நான்கும் பெண்மகளுக்கு நாண், மடம், அச்சம், பயிர்ப்பு ஆகிய நான்கும்.