பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபுக் கவிதை 14 மனத்திற்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. பாட்டில் ஏற்பட்ட நிலையாமை உணர்ச்சி சிதறாமல் காக்கவும் பெறுகின்றது. இதைத் தொடர்ந்து இன்னும் சில பாடல்களில் இத்தகைய ஒலியமைப்பே திரும்பத் திரும்ப அமைந்து வருங்கால் நிலையாமை உணர்ச்சி நிலைபெறப் பதிந்து உருவாகி விடுகின்றது. சீவகன் மனமும் துறவு நெறியில் சென்று விடுகின்றது. கூத்து இசையுடன் தொடர்பு: நம்முடைய இன்பத் தமிழ் இயல், இசை, கூத்து என்று மூவகையாகப் பகுக்கப் பெற்றுள்ளது என்பதை நாம் அறிவோம். இம்மூன்றனுள் கூத்தே முதலில் தோன்றியது நாளடைவில்அதனுடன் கலந்திருந்த இசையும் தனியே பிரிந்தது. நெடுங்காலம் கழிந்தபிறகு இசையிலிருந்து இயலும் தனியாகப் பிரிந்தது. இது வியப்பாக இருப்பினும் மொழி வரலாறு காட்டும் உண்மை அசை, சீர், தளை, அடி தொடை என்னும் யாப்புறுப்புக்களின் பெயர்கள் பாட்டு, .கூத்து, இசையுடன் தொடர்புற்றிருந்தமையைத் தெரிவிக்கும். அடி என்பது ஆடற் கலையில் அடி எடுத்து வைத்து ஆடும் பதம் என்பதைக் குறிக்கின்றது. தொடை என்பது அந்த அடிக்கியையக் கை முதலிவற்றைத் தொகுத்து இயக்குவதைப் புலப்படுத்துகின்றது. ஆங்கிலத்தில்கவிதை வகைகளுள் ஒன்றாகிய பாலட் தொடக்கத்தில் நடனத்தோடு தொடர்புடையது. பண்டைக் காலத்தில்வெற்றிவிழா போன்றவற்றைக் கொண்டாடும் பொழுது ஆடலும் பாடலும் மேற்கொள்ளப் பெற்றன. இந்தப் பாடல் ஆடலே (Ballad - Dance 'பாலட்' என்ற கவிதை வகைக்குத் தோற்றுவாயாகும். நடனம் என்ற ஃபிரெஞ்சு மொழிச்சொல்லினின்றே பாலட் என்ற கவிதையின் பெயர் அமைந்தது என்று மேனாட்டுத் திறனாய்வாளர்கள் கூறுவர். இங்ங்னமே சீர், தளை என்னும் சொற்கள் பாட்டிற்கும் இசைக் கலைக்கும் இருந்த பழைய தொடர்பினைக் காட்டுகின்றன. இன்றும் அந்த உறவு ஓரளவு இருப்பதால்தான் பாட்டினை இசையுடன் படிக்கும் பழக்கம் இருந்து வருகின்றது. சீர் என்ற சொல் 'இன்ப ஒலி என்னும் பொருளுடையது. தாளப் பொருத்தத்தைக் குறிப்பது இசைக்கு மிகத் தொடர்புடைய தாளத்தை மிக நுட்பமான முறையில் செவிக்குப் புலனாகும் முறையில் சொற்களில் அமைவதே தளையாகும். யாப்பிள் வளர்ச்சி: பழைய பாக்களான வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பா வகைகளைக் கொண்டு பல்வேறு உணர்ச்சிகட்கேற்பப் பல்வேறு ஓசை வேறுபாடுகளைக்