பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு:மு. சாந்த மூர்த்தி, 225 டாக்டர் சாந்த மூர்த்தி. உலை:- இது கவிதையில் பல பொருளில் இடம்பெற்றுப் படிப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. செய்தமைத்த யந்திரத்தின் உலையெல்லாம் சிலநாளே பொய்யான உலையாகிப் பொசுங்கிவிடும் சிலபோதில் வெய்யமன உலையொன்றின் விளைவெல்லாம் பலநாளே எய்தகனைப் பயனாக்கி எழுந்துவரும் எப்போதில் பொருள்பெற்ற இருள்நெஞ்சம் பொறாமைத்தீப் புகைச்சலாலே திருவுற்றார் தமைக்கெடுத்தல் உலைவைக்கும் திமிராகும் இருளுக்குள் இருளாகி உலையேந்திச் செல்கின்றார் வருநாளில் உலைக்குள்ளே மாய்ந்திடுவார் வரலாறு ஊர்வாயும் உலைவாயும் தந்தகதை ஏராளம் யார்வரிலும் இருவாயும் சொல்லுமொழி ஏராளம் சீர்மையெலாம் சிறகடித்து மாய்ந்தெங்கோ செல்லுமென்றால் ஊர்வாயும் உலைவாயும் உடன்தோன்றும் அவ்விடத்தில் உலைகsறும் வரலாற்றின் உண்மைகளில் பொய்யில்லை உலைபாடும் பண்களிலே பொய்யான இசையில்லை உலைநடத்தும் சமுதாயம் உருவாகும் திருநாளில் உலைவைப்பார் இலையாவர் அந்நாளும் உடன்வருக கண்ணிர்:- ஏழை உகுத்த கண்ணீர் கூரிய வாளொக்கும். என்ற பழமொழியைக் கேட்டுள்ளோம்.நீலி வடித்திட்ட கண்ணிர், முதலை வடித்த கண்ணிர் என்றெல்லாம் கேள்வியுற்றோம். பேராசிரியர் சாந்த மூர்த்தி அவர்கள் செல்வக் கண்ணிர், குழந்தைக் கண்ணிர், இளமைக் கண்ணிர் முதுமைக் கண்ணிர் வறுமைக் கண்ணிர், காதற் கண்ணிர், உதவாக் கண்ணிர், உழைப்புக் கண்ணீர், மருட்கைக் கண்ணிர், உவகைக் கண்ணிர், உயிர்ப்புக் கண்ணிர், அன்பின் கண்ணீர், தாய்மைக் கண்ணிர், உணர்வுக் கண்ணிர், வாழ்த்துக் கண்ணிர் என்று பல்வேறு கண்ணிர் வகைகளைத் தம் பாடல்களில் காட்டுகின்றார். தாலாட்டும் பாட்டுக்குத் தலைய சைத்துத் தவழ்கின்ற சிறுநாளில் குழந்தைக் கண்ணிர் காலத்தின் புத்துணர்வைக் காணும் போது காளையர்க்குத் தோன்றுவதோ இளமைக் கண்ணிர் தோலெல்லாம் சுருங்கிடவே தோன்றும் போது துளித்துளியாய் விழுவதெல்லாம் முதுமைக் கண்ணிர் ஒலமிட்டுப் பிறரழுது துடித்துப் போக உருவாதல் உயிர்சாவுக் கண்ணி ரன்றோ !