பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு:மு. சாந்த மூர்த்தி. 227 வாய்த்திட்ட இந்நாட்டின் நினைவுத் தந்தை வழிதந்த இவரன்றோ காந்தி அண்ணல் ! இராஜாஜி:- - இப் பெருமகனாரைப் பற்றி ஐந்து பாடல்கள் பாடியுள்ளார் கவிஞர் சாந்த மூர்த்தி. இவையும் எண்சீர் ஆசிரிய விருத்தங்களே. இவை மூதறிஞர் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. உரங்கொண்ட துணிவுடனே உயர்ந்த பண்பர் உளமார்ந்த பேரன்பில் வாழ்ந்த நெஞ்சர் சுரந்திட்ட காப்பியங்கள் இரண்டின் இன்பம் சுவைத்தமிழில் அமுதாக்கித் தந்த சொல்லர் கரவறியாத் திருக்கோயில் இறையைக் கண்டு கைகூப்ப அரிசனங்கள் தம்மை அன்பில் புரவலராய் உடனழைத்துச் சென்ற தூயர் புகழ்பாடும் மூதறிஞர் இவரே யாவார் சென்னைநகர் தமிழ்நகராய்ச் சிறப்ப தற்குச் செம்மாந்த இராஜாஜி துணிவே சான்று தொன்மைக்குள் வாழ்கின்ற நினைவிற் கெல்லாம் துயமன இராஜாஜி வழியே சான்று நன்மைமிகு ஆங்கிலத்தின் இருப்பிற் கிங்கே நாளென்றும் இவர்பெயரே சான்றாய் நிற்கும் நன்றன்றால் தம்கருத்தை மாற்றிக் கொண்டு நடந்தவர்தாம் மூதறிஞர் என்ப துண்மை ! இராஜாஜி அரசியல் ஞானி. அவர் அரசியல், கல்வியில், இலக்கியம் முதலிய பல துறைகளில் ஆர்வமுடனும் பெருமிதத்துடனும் நேர்மையுடனும் பணியாற்றித் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்த' பெரியார்களுள் ஒருவராய்த் திகழ்கின்றார். முரண்பாடுகளைக் களைந்து ஒருமைப்பாட்டைநிலைநிறுத்த வல்ல ஒப்பற்ற செயல்வீரர் என்று தமிழர் நெஞ்சில் நினைவுச்சின்னமாகத் திகழ்கின்றார் என்னுடைய அணுக்கரு பெளதிகம் என்ற மொழியாக்க நூலுக்கு அணிந்துரை அருளி ஆசி கூறியவர் இப் பெருமகனார்(1958) வெண்தாடி வேந்தர்:- இத்தலைப்பில் தந்தை பெரியாரைக் குறிக்கும் ஐந்து பாடல்கள் உள்ளன. ஐந்தும் எண்சீர் ஆசிரியப் பாக்கள். செங்கதிரோன் ஒளிகாட்டும் முகத்தின் செம்மை சீர்குலைவை நீக்கவரும் அகத்தின் செம்மை பொங்கிவரும் பகுத்தறிவில் பொன்னி வெள்ளம் போற்றுகின்ற நெறிகளிலே இமய உள்ளம்