பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 வாழும் கவிஞர்கள் இந்த இரண்டு பாடல்களால் அறிஞர் அண்ணா தமிழ் மக்கள் மனத்திரையில் நிலையாக அமர்கின்றார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்:தென்பாண்டிச் சிங்கம் என்ற தலைப்பில் ஐந்து பாடல்கள் உள்ளன. அவற்றில் மூன்றைத் தருகிறேன். தென்பாண்டிச் சிங்கமெனச் சிலிர்க்கும் நெஞ்சம் தெய்வீக வளமுரைக்கும் இமயத் தோற்றம் குன்றுடைக்கும் ஆற்றலினைக் கொடுக்கும் சொல்லால் குற்றத்தின் பரம்பரைதான் என்ற பொய்யை முன்மறுத்து வென்றிட்ட வாகைச் செம்மல் முத்துராம லிங்கமெனும் மறவச் செல்வம் அன்பாகத் தேவரென அழைக்கப் பெற்ற ஆன்மீகர் பசும்பொன்னின் தேவ ராவார் சிங்கமெனச் சிலிர்ப்பூட்டும் பேச்சுத் தந்தால் சிறுகுழந்தை உளம்கூட வீரம் கொள்ளும் அங்கமெலாம் துண்டித்து நின்ற போதும் அயர்வடையாப் போர்வீரர் நெஞ்சே கொண்டார் பொங்கிவரும் காவிரியாய் வீரம் கொண்டு புறப்பட்டால் இவராற்றல் வெல்வா ரில்லை மங்காத புகழ்கண்ட மறவர் கோமான் மாவட்டப் பெயர்தாங்கும் நீர்மை கண்டார் அற்புதமான எண்சீர் ஆசிரிய விருத்தங்கள். உண்மையிலே தென்பாண்டிச் சிங்கத்தை இவை சொல்லோவியமாகக் காட்டுகின்றன. தென்னாட்டில் தேவர் என்றால் முதல் தேவர் திருவள்ளுவர் தேவர் குறளும்) இரண்டாவது தேவர் சிந்தாமணி தந்த திருத்தக்க தேவர். மூன்றாவது தேவர் முத்துராமலிங்கத் தேவரைக் குறிக்கும். அண்மையில் ஒரு மாவட்டமே இராமநாதபுரத்தைப் பிரித்து இவர் பெயரால் ஏற்பட்டுள்ளது. அவ்வளவு ஏன்? நான் இன்று நின்று பேசுவது பசும்பொன் தேவர் மாவட்டத்தில்தான். 'பசும்பொன்' என்பது தேவர் பிறந்து வளர்ந்த ஊர். இவரைப் பற்றி இரண்டு நிகழ்ச்சிகள் நினைவிற்கு வருகின்றன. நிகழ்ச்சி1:- 1950 களில் நான் அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியனாக பணியாற்றிய பொழுது அண்மையிலுள்ள அழகப்பா கலைக் கல்லூரியில் பசும்பொன் தேவர் தாயுமானவர் பற்றிச்