பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 வாழும் கவிஞர்கள் 14. கவிஞர் (டாக்டர்) தா.ஜெய்புன்னிஸ்ா கவிமணி, இறைநகர் மறைமணி என்ற பெயராலும் வழங்கப் படுபவர். இவர்தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் நன்னிலத்திற்கருகிலுள்ள இரவாஞ்சேரி என்ற ஊரில் (1944) பிறந்தவர்.இரவாஞ்சேரியை இறவாஞ்சேரியாக்கி மீண்டும் இறைநகர் என்றாக்கித் தம் பெயருடன் இறைநகரைச் சேர்த்து, இறைநகர் மறைமணி என்று வழங்குமாறு செய்து கொண்டவர்.'மறைமணி என்பது அவர்தம் புனைபெயர். 1969 முதல் இப்பெயரிலேயே கவிதை படைத்து வருகின்றார். இவர் கணவர் எம்.ஏ. முகம்மது தாஜூதீன் என்பார், மிகு புகழ் வாய்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர். 1961இல் அம்மையாரின் வாழ்க்கைத் துணைவரானார். அம்மையார் மரபுக் கவிதைகளையே படைத்து வருபவர். புதுமுறைப் பாடல்களும் இவர் தம் படைப்புக்களே. இவர்தம் படைப்புக்களின் முதல்தொகுப்பு "சாந்தி வயல்" (அக்டோபர்1975 என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 'சாந்தி வயலில் காணப் பெறும் கவிதைகள் யாவும் சுமார் பத்தாண்டுக் காலங்களில் நன்னிலம் தந்த பெண்மணியின் உள்ளத்தில் மலர்ந்தவை. பல்வேறு ஏடுகளில் பல்வேறு காலங்களில் மணம் பரப்பியவை. இவை நாடு, தமிழ், பெண்மை, தலைவர்கள், மனம், பந்த பாசங்கள் போன்ற பல்பொருள்கள்மேல் எழுந்தவை. இவ்வாறு மணம் பரப்பியவை சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவை. அவற்றின் பொறுக்கு மணிகளாக நூறு கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அழகியதொரு மாலையாகக் கட்டிச் சாந்திவயலில் வைத்துள்ளார். சங்கப் பாடல்கள் பல்வேறு அரசர்கள், பல்வேறு புலவர்களின் துணை கொண்டு தொகுக்கப் பெற்றவை. இவ்ற்றைத் தொகுத்த முறையின் சிறப்பையும் நாம் அறிவோம். அவை யாவும் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களின் சிந்தனை வெளிப்பாடாக மலர்ந்தவை. - சாந்தி வயலில் காணும் மலர் மாலையின் வனப்பே தனி, பாமலர்களைப் படைத்த கவிஞரே மாலையாகக் கட்டியதால் தம் கலையுணர்வைப் புலப்படுத்துகின்றார்.இந்த மலர்மாலை கருவிலே உரு, உருவிலே தரு தருவிலே, திரு திருவிலே கரு என்ற நான்கு பெரும் பகுதிகளைக் கொண்டவை. ஒவ்வொரு பகுதிகளிலும் மூன்று சிறு பகுதிகள் அடக்கம். நான்காவது பகுதியில் மட்டும் இரண்டு சிறு பகதிகளே உள்ளன. -