பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. ஜெய்புன்னிஸா 235 கருவிலே உரு என்ற பெரும் பகுதியில் விதைவேலி, வெப்பம் என்ற மூன்று சிறு பகுதிகளும், உருவிலே திரு' என்ற பகுதியில் நிலம், நீர், எரு என்ற மூன்று சிறு பகுதிகளும், தருவிலே திரு என்ற பகுதியில் காற்று, கதிரொளி, விசும்பு என்ற மூன்று சிறு பகுதிகளும், திருவிலே கரு என்ற பகுதியில் உழைப்பு, உறுபயன், என்ற இரண்டு சிறு பகுதிகளும் அடங்கியுள்ளன. ஒவ்வொரு சிறு பகுதியிலும் பல்வேறு வண்ண மலர்கள் பாங்குடன் அமைந்து மாலையைப்பெரு வனப்புடையதாக்குகின்றது. இது தவிர ஒவ்வொரு சிறு பகுதியின் கீழ் உள்ள மலர்களையும் ஒரு சில சொற்றொடர்களால் சுட்டவும் செய்தல் அற்புதமாக மிளிர்கின்றது. இந்த மாலையில் அமைந்துள்ள வண்ண மலர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுட்டிமலர்களினமாண்பை விளக்கும் போக்கில் கவிதைகளின் சொல் நயம், பொருள் நயம், கற்பனை வளம் முதலியவற்றைக் காண்போம். நாடுஎன்ற ஒன்றுஇன்றேல் நமக்குஏது விடு? - நல்ல ஏடுநின்ற இலக்கியங்கள் இன்மொழிப் பூக்காடு சொல்விளைக்கச் சொந்தமொழி இருக்கு மாயின் - அதைச் சீர்சான்ற சொல்வயலாய் நினைப்ப துண்டு நம்நாடு என்ற மலரின் ஓர் இதழ் முன்னது பின்னது சொல்வயலின் கீழ் வருவது. நாடுஎன்ற ஒன்று இங்கு என்றும் - நிரை நல்ல இரத்தம் ஒடும்உடல் மன்றம் மாடுமனை மக்கள்சுற்றம் என்றும் - குறை மனதுடையார் குறுவட்டம் அன்றோ? தேடுசெல்வம் தனக்கெனவே என்றும்- கறை தொலைத்தலிலா தன்மைகொண்டு இன்றும் நாடுஎன்ற ஒன்றில்நாடு கின்ற - நிறை - நஞ்சுமன்த் தாரழிவர் அன்றோ? என்று கூறும் கவிஞர் இந்தியாநம் அனைவருக்கும் சொந்தம்- இங்கு ஏற்றிடுவோம் ஒருமைவழி பந்தம்