பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 வாழும் கவிஞர்கள் என்று முத்தாய்ப்பாக ஒருமைப்பாட்டை வற்புறுத்துவார். தாய்மொழியின் பெருமையை உணர்த்தும் போக்கில் அவரவர்க்குத் தாய்மொழியே கருப்பஞ் சாறு அகமுறையும் அன்னைமொழி விரும்பும் சோறு என்றும் பெறற்கரிய பொருள்வளம்தான் மொழியே உண்மை பேணிடும்நற் பணியதனைப் புரக்கும் தன்மை உறற்குரிய உறவெல்லாம் உய்தல் அண்மை உடன்பட்டார் நெஞ்சத்தே நிலைக்கும் தன்மை என்றும் கூறுவார். தொடர்ந்து தாயின்றி நாம்இல்லை தரணி இல்லை தாயுணர்த்தும் மொழியின்றித் தகைவே றில்லை என்று மொழிவார்.இந்த நாட்டின் ஆட்சி - ஏழையர் சிரிப்பினில் இறைவனைக் கண்டிடும் - என்ற பாங்கில் அமைந்திடல் வேண்டும் என்கின்றார். வேலி என்ற சிறு தலைப்பின் கீழ் யார் அடிமை? என்பதைப் புரட்சிகரமாகப் பேசுகின்றார் - பெண்களுக்கு அறிவியலில் ஏற்றம், அரசியலிலே பங்கு, சமூக இயலில் சமத்துவம், எல்லா வகை உரிமைகளும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று சொல்லுக்குச் சொல் அழகேறும் அடிகளில் மேற்கோள் நயத்துடன் இடித்துரைக்கின்றார் கவிஞர் ஜெய்புன்னிஸ்ா. அன்னை வயிற்றில் அடிமைநீர் அதன்பின் மடியில் அடிமைநீர் கண்ணை மூடும் தாலாட்டின் கான மழைக்கும் அடிமைநீர் மண்ணை மிதித்து நடமாடின் மண்ணின் மாதா அடிமைநீர் எண்ணை எழுத்தைக் கற்கும்நாள் இதனை யளிப்பார்க் கடிமைநீர் யார் யாருக்கு அடிமை என்பது போல் கூறிய கவிஞர். முதலுதவிப் பெட்டியடா மனைவி - மேவும் முதல்முடிவாய் ஆகிடும்தல் துணைவி எதிலெதுவோ உதவுகின்ற நினைவில் - ஏவும் எழில்மனத்தை இயக்குபவள் மனைவி என்ற கவிதைப் பகுதியில் பெண்மையின் முழுமையை மனைவி வழி கூறுகிறார்.