பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 வாழும் கவிஞர்கள் சிலகற்ற சிறுமதியர் துாற்றக் காணில் சிரிப்பொன்றை உதிர்த்தவர்தம் சிந்தை வென்றார் பலகற்ற நூலறிவை எழுத்தில் பேச்சில் டாரவர்க்கு உணர்த்திய நம் அண்ணா போற்றி 3. கலைஞர் கருணாநிதி!-- நீதிக்கும் நேர்மைக்கும் பெயரைப் பெற்ற நல்லதொரு நற்சாட்சி கலைஞர் ஆட்சி சாதிக்கும் திறன்ஒன்றே நெஞ்சிற் கொண்டு சமுதாய நல்வாழ்வு பேணும் ஆட்சி வாதிட்டுத் தோற்றோடும் மாற்றார் தம்மின் வளமான வாழ்வுக்கும் இதுவே சாட்சி ஆதிநாள் பொற்காலத் தமிழர் ஆட்சி அமைந்திட்ட மாட்சிக்கும் மேல்இவ் வாட்சி 4.அப்துல் சமது:- இப்பெரு மகனாரைப் பற்றி மூன்று பாடல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று, வல்லுநர் உருவம் வயங்கிடு புருவம் உதட்டினில் புன்னகை மருவும் துல்லிய நெஞ்சம் துவள்பவர் தஞ்சம் தீன்குலப் பண்புசேர் மஞ்சம் மெல்லிய மனமும் மிகையுறாச் சினமும் மேம்படு இனியநற் குணமும் நல்லவர் ஸ்மத் வர் நமக்குறு தலைவராம் நயமொடு நீடுநாள் வாழி (தீன் குலம்-இஸ்லாமிய நெறியில் வாழும் குலம்) 5. ஹானிமம்:- - இந்த மாபெரும் மருத்துவரைப் பற்றி, தேங்குபுகழ் செல்வமெலாம் தீர்ந்தே போகும் திடமான நல்லுடம்பு பேணாக் காலை தீங்குபல சேர்ந்திடவே நோய்கள் சூழும் திகைத்திடில்நம் சுகம்ஏகும் உயிரே போகும் ஈங்குலகோர் நோய்கள்தனை அறவே போக்கி இணையில்லா ஓமியோ பதியால் சாலும் ஒங்குபுகழ் மருத்துவநல் வழியைத் தந்த உத்தமராம் ஹாணிமனை வாழ்த்து வோம்நாம். ஒரு சமயம் சென்னை நகர் மழையின்றி வறட்சியால் துன்புற்றது. காய்கதிர்ச் செல்வன் தன் ஆற்றலால் தானே மூலம்-ஆதி மூலம் என்பதையும், அந்த விரிகதிர்ச் செல்வனே மழைக் கடவுள் என்பதனையும் நாம் அறிவோம். அவனை நோக்கி விண்ணப்பிக்கும் பாடல்கள் புதுமையானவை.