பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கவிஞர் குழ. கதிரேசன் இவர் குழந்தைக் கவிஞர்.குழந்தை இலக்கிய வானில் ஒரு துருவ மீன் போல் நிலைத்து வாழும் அழ. வள்ளியப்பாவின் வாரிசு போல் செட்டிநாடு தந்த குழந்தைக் கவிஞர் இவர், இவர் வளர்ந்தவர்கட்கும் கவிதைகள் இயற்றியுள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் இராயவரம் என்ற ஊரில் பிறந்தவர் (1949).இராயவரம் காந்தி உயர்நிலைப் பள்ளியில் தொடக்கம் முதல் பயின்று பள்ளி இறுதிப்படிப்பை முடித்துக் கொண்டு மதுரை, தியாகராசர் கல்லூரியில் பயின்று தமிழ் இலக்கியத்தில் (1971 இளங்கலை (பிஏ பட்டம் பெற்றவர். தற்சமயம் ஐந்திணைப் பதிப்பகம் என்ற நிறுவனத்தின் அதிபர். இவர் ஆசிரியராக வெளியிட்ட நூல் பதினைந்து நிறுவனத்தின் மூலம் முந்நூறுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். 'நெருப்புக் கொப்பளம் ' என்ற சமுதாய இலக்கியப் பாடல்கள் வளர்த்தவர்கட்கு ஏற்றவை. இதில் உள்ள பாடல்களில் சில பேச்சுத் தமிழிலும், மற்றவை இலக்கியத் தமிழிலும் அமைந்தவை. நூல், உலகம் போற்றும் உயர்ந்த தமிழே உனக்கு என்றன் வணக்கம்- அதைச் சொன்னால் வாயும் மணக்கும் இலக்கண இலக்கிய ஆடை யணிந்து என்தமிழ் மொழியே திரிகின்றாய்-நீ எத்துணை அழகாய் இருக்கின்றாய் தமிழே நீஎன் நாவில் புகுந்து தடபுட லாக ஒலிக்கின்றாய்-செந் தமிழை ஒன்றாய் இணைக்கின்றாய் ஐம்பெருங் காப்பிய அணிகலன் பூண்டு அன்னைத் தமிழ்நீ நடந்தாயே-பல் ஆயிரம் ஆண்டையும் கடந்தாயே என்ற தமிழ் வ்ணக்கப் பாடலுடன் தொடங்குகின்றது. தமிழ் இவர் நாவில் புகுந்து ஒலிக்கின்றது என்ற கருத்து நம்மாழ்வாரின்