பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழ, கதிரேசன் 247 இவை அற்புதமான கவிதைகள் போலி, தாலி, அசலு, வேலி என்ற சில சொற்களைக் கொண்டு-அதாவது குறியீடுகளாகக் கொண்டுஇன்றைய உலகில் அன்றாட வாழ்வில் நடைபெறும் பல அடாத செயல்களை விளக்குகின்றார் கவிஞர். தடை மீறல்:- இது சாலை விதிகள் சரியாகக் செயற்படவில்லை என்பதை விளக்கும் தலைப்பிலான கவிதை, காரு வண்டி சாலையிலே ஒட்டப் பந்தயம் வைக்குது நீயா நானா போட்டியிங்கே நித்த நித்தம் நடக்குது வேகத் தடையை மீறுகின்ற விளையாட் டெல்லாம் நடக்குது உயிர்கள் வாழத் துடிப்பதையே உற்சா கத்தில் மறக்குது. வேகத்துக்கு ஆசைப் பட்டால் உயிரு போகும் நிச்சயம் வேகத் தடைக்கு மனசிருந்தால் விபத்து இல்லை சத்தியம் இன்றைய நிலையை விளக்குவன இக்கவிதைகள், சில சமயம் நின்று பயணிகள் இறங்கும் போது அவ்வழியே மிதிவண்டி, மோட்டார்(மிதிவண்டி ஸ்கூட்டர் விடப்படுகின்றன. இறங்கும் பயணிகளுக்கு விபத்து நேர இவை வாய்ப்பாக அமைகின்றன என்ற எச்சரிக்கையை இவைகள் காட்டுகின்றன. . - 'பொங்கி எழும் என்ற தலைப்பில் வரும் கவிதைகளில் பாரதி படைத்த புதுமைப் பெண் போல் பெண் காட்டப் பெறுகின்றாள். பெண்ணே நீயும் பொங்கியெழு பயந்தது போதும் துள்ளிஎழு தீமை வந்துனைத் தாக்குகையில் தீயின் பிழம்பாய் மாறிவிடு ஈரம் நெஞ்சில் இருந்தாலும் இதயத்தை இரும்பாய் ஆக்கிக்கொள் கணவனும் கொடியவன் ஆகையிலே கழற்றி விடவும் கற்றுக்கொள் திருந்தா உயிர்கள் உலகத்தில் தேவையே இல்லை ஒப்புக்கொள்