பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 வாழும் கவிஞர்கள் இவற்றின் மூலம் பெண்களுக்கு எழுச்சியூட்டுகின்றார், வீர மகளிராக மாற வேண்டும் என்பதனை வற்புறுத்துகின்றார். 'சுற்றுப்புறத் தூய்மைக்காக இரண்டு தலைப்பில் உள்ள கவிதைகளைக் காண்போம் சபதம் செய்வோம்' என்ற தலைப்பில் வருவன. பெருநகர்த் தெருஉடல் நலத்துக்குக் கேடு தெருவெங்கும் கிடக்குது எச்சில் காடு வெண்புகைச் சுருளும் வளையம் டோடும் வருவோர் போவோர் முக்கில் ஏறும் எரியும் நெருப்பு அணைக்கா திருக்கும் எச்சில் பீடி சிதறிக் கிடக்கும் வாழைப் பழத்தோல் வழியில் கிடக்கும் வழுக்கி விழுந்தால் உடலை முறிக்கும் எனப்பாடிக் கொண்டே வருபவர் இறுதியாக இந்நிலை மாற அனைவரும் கூடி எடுக்கனும் சபதம் ஒருமன தாக நோய்வரும் முன்அதை விழிப்புடன் இருந்தே தடுத்திட வேணும் பெருந்திர ளாக! என முடிக்கின்றார்.நம்மால் முடியும் என்ற தலைப்பும் மேற்கண்டவாறே சுற்றுப்புறத் துய்மை காக்க வேணுங்க- அதுக்குச் சுறுசுறுப்பாய்ப் பாடுபட வேனுங்க என்று கூறியதோடு பேருந்து நிலையத்தில் காணும் சிறுநீர்ப் பெருக்கு, சில இடங்களில் தடைப்பட்டு நின்று போன சாக் கடையின் ஓட்டம். ஈயும் கொசுவும் இணைகோத்துப் பாடும் நிலை, ஊர்திகள் கக்கும் புகை போன்ற நிலைமைகளையும் கவிதையாக்கித் தீர்வு கூறுகிறார் கவிஞர். கவிஞர் குழ. கதிரேசன் கவிதைகள் புதுக்கவிதை பாணியும், மரபுக் கவிதை பாணியும் கலந்த பேச்சு வழக்கில் புழங்கும் சொற்களைக் கொண்டு தென்காசி வழக்குப் போல் ஒரு வகைப் புதுப்பாணியில் அமைந்து படிப்போருக்குத் தெம்பை ஊட்டுவனவாகத் திகழ்கின்றன.