பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 வாழும் கவிஞர்கள் நகைச்சுவைக்கும், சிந்தனைக்கும் விருந்தாக அமைகின்றன. சில கவிதைகளில் புதிய கற்பனைக் கூறுகள் பளிச்சிட்டுப் பரிமளிக்கின்றன. கவிஞரின் தமிழ்ப் பற்றும் தெரிவாகப் புலனாகின்றது. சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன். விடுதலை வீரன் என்ற தலைப்பில்'9771ல் சென்னை மாவட்ட நூலகத்தில் அரங்கேற்றப் பெற்ற கவிதை. பாட்டெழுதிப் பாட்டெழுதிப் பாரதத்தின் விடுதலையைத் தீட்டிவைத்த நாயகனைத் தேனமுதப் பாவலனை எலுமிச்சைப் பழமிரண்டை இருத்தும் அளவுக்குக் கொழுத்த மீசையொடு கொள்கை வளர்த்தவனைப் பாடிக் களிக்கின்றோம், பாட்டாலே புகழ்மாலை சூடிக் கொடுத்துச் சுகக்கவிதை சொல்கின்றோம். இப்படி முன்னுரையாகப் பாடிய கவிஞர் . சந்தயிலே தவித்தமிழ்க்கவியை நாட்டில் சரஞ்சரமாய்த் தொகுத்திங்கே தமிழைக் காத்த செந்தமிழன் பாரதியைப் போல நாட்டில் தேனமுதப்பாவலன்யார். காசுக்குச் சிலகவிதை புனைவர் மாயக் கண்ணாலே கதைசொல்லித் தன்னை விற்கும் வேசைக்குச் சிலர்கவிதை புனைவார் நாட்டு விடுதலைக்குக் கவிபுனைந்த புலவன் யார் யார்? பாரதியை அருமையான எண் சீரால் அடையாளம் காட்டினார். அடுத்துக் காவடிச் சிந்து மெட்டில் சொல்லெல்லாம் கவியாகப் பெய்தான் பாட்டுச் சுடராலே பகைவர்தலை கொய்தான் நாட்டில் வல்லவர்க்கே உணர்வூட்டி வாள் கொண்டு பகையறுக்கச் செய்தான் எல்லாம் மெய்தான் என்று கவிதைகளை கொட்டிக் குவித்துப் பாரதி பற்றிய கவிதையை நிறைவு செய்தார். விடுதலை வீரன் என்ற தலைப்பில் உள்ள கவிதை சென்னை அனைத்துக் கல்லூரி மாணவர் கவிதைப் போட்டியில் இலயோலாக் கல்லூரியில் அரங்கேற்றப் பெற்று முதற் பரிசு பெற்றதாகும். இதில் சில பகுதிகள்.