பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 வாழும் கவிஞர்கள் பொற்காலம் எதிர்கா லத்தில் பூத்திட வேண்டு மானால் தற்கால வாழ்வை நாமும் தத்துவம் ஆக்க வேண்டும் இக்கவிதைகளில் கவிஞரின் அறிவு முதிர்ச்சியும். சிந்தனைத் தெளிவும் மின்வெட்டுப் போன்ற கருத்துச் செறிவும் தென்படுகின்றன. அமைதி என்ற தலைப்பில் அமைதி எங்கே இருக்கிறது. எதைத் தேடியபோது அது தன்னுள்ளே இருக்கிறது. எனத் தெரிந்துகொண்டதாகப்பாடுவது அவரவர் அனுபவத்திற்கும் பொருந்துவதாகும். அன்பினைத் தேடிச் சென்றேன் அன்னையால் கண்டு கொண்டேன் பொன்னினைத் தேடிச் சென்றேன் புதையலால் பெற்றேன் கொஞ்சம் இன்பமும் வேண்டும் என்றேன் ஏந்திழை அவளால் பெற்றேன் என்னுளே அமைதி தேடி இருக்கின்றேன் அறிந்தே னில்லை மீண்டும் அமைதியைக் கவிஞர் தேட முயற்சிக்கிறார். எதிலுள அமைதி என்றே இன்றுதான் கண்டேன் வாழ்வுக் கதையினை முடித்து நல்ல கனவுல கடையும் மேனி சிதையினில் எரிந்த போது சிரிப்பதில் அமைதி கண்டேன் அதனையே அமைதி என்பேன் அங்குதான் அமைதி தேக்கம் தொல்லைகள் வெறுத்தே இந்தத் துயரும் கறுத்த மேனி கல்லறைக் குள்ளே பாடும் கவிதையில் அமைதி தேக்கம் வல்லமை பெற்றும் வாழ்வில் வளம்பல பெற்றும் நெஞ்சில் இல்லையே இல்லை என்போர் இறப்பிலே புரிந்த கொள்வர். இக்கவிதையில் அமைதியின் இருப்பிடத்தைக் கண்டு விடுகின்றார். இறப்பிலே அதைக் காணலாம் என்று கூறும் கவிஞரின் கருத்தில் அவர்