பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 வாழும் கவிஞர்கள் விறுவிறுப்படைகிறது. பாலாடைப் பூமேனி பாவையவள் கண்ணிரண்டில் சேலாடும் கோலம் சிரிக்கும் பருவமகள் கோமளப்பூப் போன்ற குளிர்சோலைச் செல்வியவள் மாமதுரைத் தேன்தமிழ்தான் மஞ்சத்தில் மல்லிகைதான் நாணிக்கண் மூடுகையில் நங்கையவள் கன்னம்செவ் வானிருக்கும் வண்ணமென வார்த்தெடுத்த பொன்னாகும் கொண்டுவந்த நல்முத்து கொஞ்சும் இளஞ்சோலை வண்டுதந்த பூங்கண்கள் வானத் திரைமீது கண்டுவந்த வெண்ணிலவு காதில் தமிழ்கூட்டி வண்டுவந்த தேன்கவிதை வெண்ணிலவுக் கன்னி அடுத்து அந்தக்காதல் எண்சீரில் ஏக்கத்தைத் தருகிறது. அன்றொருநாள் ஏடொன்று வேண்டும் என்றே அழகுமயில் நடமிட்டு வந்தாள் தேனைக் கண்டவன்போல் களித்தேன்பின் பேசி விட்டேன் கண்ணாலே சொலும்பேச்சு காதல் பேச்சு பெண்ணழகி தனைநெருங்கி ஏடைத் தந்து பெயரென்ன எனக்கேட்டேன் பெயரைச் சொன்னாள். மின்வெட்டுச் சிரிப்பொன்றைத் தந்தாள் வினை மீட்டிவிட்ட தொனியென்றேன் பறந்தே போனாள். மறுநாள் நாயகன் மரிக்கின்றான். வெண்ணிலாச் சிரிப்புக்காரி விதவைக்காரி ஆகின்றாள். நிலை என்ன? துடிக்கின்றேன் துன்பத் தாலே துவள்கின்றேன் சோகக் கண்ணிர் வடிக்கின்றேன், உயிர்பி ரிந்தும் வாழ்கின்றேன், சோகப் பாட்டுப் படிக்கின்றேன், அவளை நெஞ்சில் பார்க்கின்றேன், அவளைப் பாட்டில் வடிக்கின்றேன், அவளை எண்ணி வாழ்வதால் இளைத்துப் போனேன். என அறுசீரில் அழுங்கும் காதல் உணர்வுகளை உண்மையில் அநுபவம் பெற்றவர் எழுதியது போல் கவிதையைப் படைத்திருப்பது வைரமுத்துவை வைரமுத்துக் கவிஞராக அடையாளப்படுத்துகிறது எனலாம். பெயர் சொல்ல மாட்டேன் என்ற தலைப்பில் உள்ள கவிதை ஓர் ஊமைப்பெண்ணுடன் காதல் கொள்வதாக அமைந்த கற்பனையில் முகிழ்த்த உயிரூட்டமுள்ள கவிதை.