பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 வாழும் கவிஞர்கள் என்று கேள்விக் கணைகளை வைக்கின்றார். மேலும் விரித்துவைத்த சிறகை ஏன் சுருக்கிக் கொண்டாய்? விதிவரை வந்தபின்ஏன் விலகிச் சென்றாய்? சிரித்துவந்த மழையேஏன் நிறுத்திக் கொண்டாய்? தீண்டவந்த விரல்களைஏன் எரித்துக் கொண்டாய்? புரிந்துகொள்ள முடியாத புனிதப் பெண்ணே புன்னகையால் கண்ணிரைக் கழித்த விட்டாய் என்று பேசுகின்றார். இறுதியாக, நித்தியத்தில் இருபேரும் கலந்து போவோம் நீயாரோ நான்யாரோ மறந்து போவோம் புத்துலகம் நாம்தேடிப் பறந்து போவோம் புவியீர்ப்பு மையத்தைக் கடந்து போவோம் பித்தத்தில் இருவருமே பின்னிப் போவோம் பிரபஞ்சம் அழிகையிலே பிரிந்து போவோம் முத்தத்தின் சத்தத்தில் உடைந்து போவோம் மோகத்தால் முக்திநிலை அடைந்து போவோம் என்று காதல் கவிதையை முத்தாய்ப்பாக நிறைவு செய்கிறார் கவிஞர். நிறைவுப் பாடலில் சங்கப் பாடலின் தொனி கேட்கிறது. மேலும் இதன் کانیه தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு (குறள்-1102) என்ற பொய்யா மொழியையும் நினைவு கூரச் செய்கின்றது. காதல் உணர்வுகளைத் தவிர வேறு உணர்வுகளும் கவியரசு வைரமுத்துவின் கவிதைகளில் புலனாகின்றன. - 'மெளனம் பேசுகின்றது என்ற தலைப்பில், கடமைகள் மறந்து விட்ட கனவுகள் பிடிக்க வில்லை அடிக்கடி உயிரைக் கிள்ளும் அவசரம் பிடிக்க வில்லை குடம்குட மாகப் பொய்யில் குளிப்பதில் விருப்ப மில்லை சடங்குகள் பெரிய தொல்லை சத்தங்கள் பிடிக்க வில்லை எனக்கவிஞர் விரும்பாதவை பற்றிக் கூறினாலும், அடுத்து அவர் விரும்புபவை எவை? என்பதையும் கூறுகிறார்.