பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா. வைரமுத்து 257 நதிக்கரை ஓரம் பார்த்து நாணலால் கூரை வேய்ந்து புதுப்புதுத் தென்றல் வந்து புகுந்திட வாசல் வைத்து அதிசய மானத் தைநான் அண்ணாந்து பார்த்துக் கொண்டே ஒதுங்கவே பிரியம், புல்லில் உறங்கவே பிரியம் உண்மை இக்கவிதையில் அவர் மெளனத்தை நாடவில்லை. அமைதியை நாடுகின்றார். எளிய வாழ்க்கையை நாடுகின்றார் எனப் புலனாகின்றன. 'நெஞ்சொடு கிளத்தல் என்ற தலைப்பில் காணப்பெறும் பாடல்கள் சிந்தனைக்கு நல்விருந்தாக அமைகின்றன. அகப்பொருள் துறையான இதனைப்புறத்துறையாக மாற்றி அமைத்தது அற்புதம்.ஆறு கவிதைகள் உள்ளன. அவற்றுள் நெஞ்சை ஈர்க்கும் சில கவிதைகள். இரவும் பகலும் கதிருக் கில்லை இயற்கையாய் அறிந்தாய் என்மனமே வரவும் செலவும் காற்றுக் கில்லை வாசித் தறிந்தாய் என்மனமே துறவும் துய்ப்பும் மரங்களுக் கில்லை சொல்லி அறிந்தாய் என்மனமே இறப்பும் பிறப்பும் கவிஞர்க் கில்லை எப்பொழு தறிவாய் என்மனமே? தேங்காய் தின்றால் ஒடுகள் மிச்சம் தின்று தெளிந்தாய் என்மனமே மாங்காய் தின்றால் கொட்டை மிச்சம் உண்டு தெளிந்தாய் என்மனமே தீங்குகள் செய்தால் தீங்கே மிச்சம் செய்து தெளிந்தாய் என்மனமே ஓங்கி எழுந்தால் உலகே மிச்சம் உணர்ந்திடு வாயா என்ம்னமே? என்ற கவிதைகள் படிப்போரைச் சிந்திக்கச் செய்பவை. இலக்கணக் காதல் என்ற தலைப்பில் உள்ளவை நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. வியப்பு கலந்த மகிழ்ச்சியையும் தருகின்றன. காதலன்-காதலிக்கிடையே நடைபெறும் காதல் உரையாடலாக நடைபெறுகின்றது. என் கவியைப் பற்றி அவள் கூறுவாள், தேனத்தான் கனியத்தான் தேனைச் சேர்த்த தினையத்தான் உம்கவிதை என்றாள், என்னை