பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 வாழும் கவிஞர்கள் ஆணழகே என்றாள்.நான் கரும்பே என்றேன் அடி(க்) கரும்பு தான்மிகவும் இனிக்கும் என்றேன் என இலக்கணக் காதல் தொடர்கின்றது. பொறுமையாகப் படித்துச் சுவைக்க வேண்டும். பழுத்தசையும் கணிக்குன்று நடனம் ஆடிப் பச்சைநிறத் தாடைகட்டி வருதல் போல எழுந்தசைந்து சீர்பாடி என்னி டத்தில் இன்னமுதே அடியெடுத்து வந்தாய் நானும் செழுந்தேனே உனைத்தொட்டுச் சுவைக்கு முன்னே சீராகத் தொடைகாட்டித் தளைத்தாய் என்னை விழுந்தேனே கவிக்கடலில் நீயில் லாமல் வினைத்தொகையில் சந்தியென வாழேன் என்றேன். பண்பென்னும் தொகைவிகுதி தன்னைக் கண்ணில் பக்குவமாய்த் தீட்டியெனை இழுத்தாய் பின்னால் வெண்பாவில் கனிச்சீர்போல் விலகிச் சென்றாய் விடுவேனோ குற்றியலின் உகரத் தோடு தன்போக்கில் சேருகின்ற உயிர்போல் நானும் தங்கமயில் உனைச்சேர வந்தேன் என்றன் கண்பாவை போன்றவளே கனகப் பூவே கலிப்பாவின் ஒசையை உன் நடையில் கண்டேன். முடிந்தாலும் பொருள்தொடரும் முற்றெச் சம்போல் மோகனமே நீதந்த இன்பம் நெஞ்சில் விடிந்தாலும் இனிக்கிறதே தேனே உன்றன் விழிப்பூவின் இமைஇதழை விலக்கி ஆங்கே படிந்தாடும் உன்னுருவைப் பார்த்தேன் உன்றன் பனிமுகத்தை ஒளிக்கரத்தால் தொட்டேன் என்றும் முடியாத வெண்பாநீ என்றன் மூச்சை - முச்சீராய்க் கொண்டேc முடிவாய் என்பேன். பாகுநிகர் மொழியாளே இலக்க ணத்தில் படித்துள்ளேன் உருபுக்கு மயக்கம் உண்டு மோகமலர் போன்றவளே கண்டேன் உன்றன் முதிராத உறுப்புக்கும் மயக்கம் உண்டு மேகமழைக் குழலாளே நெஞ்சக் காவில் மிதந்தாடும் மலர்க்காற்றே பவளப் பூவே ஆகுபெயர் போலெனக்கே ஆகி விட்டாய் அடிபிறழா வஞ்சிப்பா நீதான் கண்ணே. சரஞ்சரமாய் நான்கவிதை பாடப் பாடச் சந்தங்கள் தத்துவங்கள் சேர்த்துத் தந்தாய்