பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 வாழும் கவிஞர்கள் சமுதாயக் கோட்டைக்குச் சரித்திரத்துக் கதவுகளாய்ச் சார்ந்திருப்ப தாசிரியர் கூட்டம்-அது அமுதான கவிகாட்டும் அந்திவண்ணப் பூந்தோட்டம் அறிவுமணம் நின்றகலைக் கோட்டம். ஏணியென மாணவரை ஏற்றிவிட்டுத் தாம்.கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை-அந்த மேனிநலம் பாராத மேதையரைப் பாடாமல் மேதினியில் இருக்கிறதா கவிதை? அன்னவரின் நெஞ்சினிலே ஆனந்தம் நின்றால்தான் அறிவுநதி தேனாக ஒடும் கண்ணின் கரையோரம் கதைகேட்டு நின்றாலா கவிதைமயில் அங்கெழுந்து ஆடும்? தத்துவமே ஆசிரியர் தந்ததுதான் ஆமிஃது சமுதாயம் போடுகின்ற கணக்கு-ஆனால் புத்தகத்தைச் சுமக்கின்ற போக்கற்றோர் எண்மீண்டும் புகழ்கிறதே புரியவில்லை எனக்கு தம்குருதி எண்ணெயிட்டுத் தம்நரம்பைத் திரியாக்கித் தருகின்றார் அறிவொளியை நாளும் - இங்கே இன்மையிலே வழிகாட்டி இருளோட்டும் அவரிலையேல் எந்தவிதம் மனிதகுலம் வாழும்? ஆசிரியர் பணியொன்றே அறப்பணிஎன் றேதம்மை அர்ப்பணித்துக் கொண்டவரைத் தொழுது-தென்றல் வீசிவரும் வேளைகளில் வித்தாரக் கவிதையெனும் விதையிடுவோம் அறிவுநிலம் உழுது அடுத்தவொரு புவிபடைத்தால் ஆண்டவனே ஆளுகின்றோம் ஆசிரியராயி ருக்க வேண்டும்- அறிவு கொடுத்தவரை மதிக்காத கோணல்மதிச் சமுதாயக் கொள்கைக்கே உயிர்வரவோ மீண்டும் இங்ங்ணம் சந்த நயத்துடன் மரபு வழியில் புதுவகைப் பாடல்கள் பாடியுள்ளார் - கவிஞர் கவியரசரின் ஒரு கருத்து:- மரபுக் கவிதை மறைந்துவிடும் என்று சிலர் அஞ்சுகின்றனர். இவ்வச்சம் புதுக்கவிதை பரவிவரும் வேகத்தால் ஏற்பட்டது. இது தவறான கருத்து.மரபுக் கவிதை சாகும் சங்கதி அன்று. அது மார்க்கண்டேய வரம் பெற்ற பெருமை கொண்டது. ஈராயிரம் ஆண்டுகளாய் விழுதிறங்கிய ஆலமரம். அதுவோ கரையான்கள் அரிக்க முடியாத ஆழத்தில் உள்ளது.