பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் முடியரசன் 17 கவிதைகளின் மதிப்பீடு: ஒருவரின் கவிதைகளை மதிப்பிட வேண்டுமானால் இரு நோக்கில் ஆய்ந்து மதிப்பிடலாம். அவை, உருவம் உளளடககம் எனபனவாம். 1. உருவம் - இதில் கற்பனை, சொல்லாட்சி, ஒலிநயம், உருவகம். யாப்பமைதி, அணிநலம், சுவை முதலியன அடங்கும். 2. உள்ளடக்கம் - கவிதைகள் துவலும் கருத்து, இதில் கவிஞரின் பல்வேறு கொள்கைகள், வாழும் சமுதாயம் பற்றிய குறிப்புகள். அரசியல் முதலியவை அடங்கும். இந்த அம்சங்கள் அனைத்தையுமே கொண்டு எல்லாக் கவிதைகளும் விளங்கும் என்று நினைத்தல் தவறு. இவற்றுள் ஒருசில அமைந்திருப்பினும் சாலும், ஒன்றிரண்டு நலன்கள் சிறப்புடன் அமைந்திருந்தாலும் கவிதை உணர்த்தும் செய்தி மிகவும் முக்கியம். அதுவின்றேல் கவிதைகள்'வெற்றெனத் தொடுத்தல் என்ற குற்றத்திற்கு ஏதுவாகிவிடும். இவர் கவிதைகளில் ஒரு கற்பனையைக் காட்டுவேன். கட்சிக் கூட்டங்கள் நடைபெறும் போது எதிர்க் கட்சிகளைச் சார்ந்த ஒரு சிலர் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு குழப்பம் விளைவித்துக் கூட்டத்தைக் கெடுப்பதற்கு வழியமைத்தலை இன்றைய உலகில் நடைமுறையில் காண்கின்றோம். இதனால் மதியுடையார்கள் அஞ்சி மேடை ஏறாதிருப்பார்களா? எப்படியும் கூட்டம் நடத்தத்தான் செய்வார்கள். இத்தகைய குழப்பம் விண்ணுலகத்திலும் நடைபெறுகின்றது என்று தம்கற்பனையை விரிக்கின்றார். இதை இயற்கை உலகம் என்ற தலைப்பின் கீழ் நிலவு பற்றிய ஒரு பாடலில் காணலாம். மதியுடையார் பேசுவதைக் கேட்டல் நன்று மாண்புவரும் எனக்குழுமும் விண்மீன் கூட்டம் அதுமகிழ வானத்து மேடை ஏறி அம்புலியார் சொற்பொழிய முகிலன் ஒடி எதிரியெனக் கூட்டத்துள் ஒளிம றைத்தான் இடியிடித்தான் குழப்பத்தை ஆக்கி விட்டான் இதிலென்ன கண்டனரோ மதியர் நாளை ஏறாமல் இருப்பாரோ மேடை மீது விண்மீன்களின் பெருங்கூட்டம் ஒன்றில் மதியர் என்னும் அம்புலியார்