பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -> عمومي கவிஞர் முடியரசன் 23 ஒற்றுமையைக் கண்டன்றோ என்முன்னோர் உனைப்பரவை என்று சொன்னார். தொழிலாளர்கள் பற்றி இந்த உலகில் கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பாக இயற்கையில் அமைந்திருப்பவை இறைவனால் படைக்கப் பெற்றவை. கைபுனைந்தியற்றிய கவின்பெறு வனப்பு செயற்கையாக அமைந்தவை. இச்செயற்கை தொழிலாளர்களின் கைவண்ணத்தால் ஏற்பட்டவை. படைத்தோன் வாழ்க என்ற கவிதை மைசூர்ப்பகுதியிலுள்ள கர்நாடக மாநிலம் கிருட்டிணராஜ சாகர் என்ற நீர்த் தேக்கத்திற்கருகிலுள்ள பிருந்தாவனம் பற்றிய கவிதையாகும். இதில் செயற்கைபற்றிய செய்தியைக் காணலாம். பிருந்தா வனத்தின் பேரெழில் கண்டேன் அப்பெரும் எழில்நாம் அவனியில் காணத் தப்பியோர் விழிப்பயன் தப்பியோர் ஆவர் எண்ண இயலா வண்ண மலர்கள் கண்கவர் வனப்பொடு கற்பனை பெருக்கும் நிலமிசைப் படுபுல் நிமிர்தரு செடிகள் வலைநிகர் கொடிகள் வகைவகையாகக் கைபுனைந் தியற்றிய காட்சியே காட்சி இருவிழி எதுவதை எட்டுமோ அதுவரை பரவிய எல்லை படைத்ததப் பூங்கா பசுமையும் தன்மையும் பாங்குடன் குழைத்துப் பூசிய தென்னப் பொலிபூங் காமிசை வீசிய விழியோர் வியப்புற் றாங்கே இனயா நாட்டத் திமையோர் ஆவர் விண்ணுல குண்டென விளம்புவோர் கண்டிலேன் கண்னெதிர் கண்டேன்.அக் கற்பனை உலகம். அப் பூங்காவில் ஊற்றுக் குழல்நீர் அமைப்பினைக் கவிஞர் காட்டுகிறார் . ஊற்றுக் குழல்நீர் காட்டும் வித்தை வேறோர் இடத்தும் கண்டேன் அல்லேன் விரிகுடையோவென ஒருபாற்கானும் வரிசிலையோவென ஒருபால் வளையும்