பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g 建 ఫ్గ{ :ன் £x& அணிமைத் தொட்டி யகத்துள் வீழ்ந்து மாயும் ஒருபால், மற்றொரு பாங்கர்ப் பிரிந்தவர் கூடும் பெற்றிமை போலப் பெருந்தும் இருபுறத் திருந்து வருநீர் இருபுலப் பகைவர் எதிரெதிர் நின்று பொருது வீழும் பான்மையே போல அணிஅணி யாக அவ்விடை மோதும் எண்.ே ராயமும் ஐம்பெருங் குழுவும் தன்புடை சூழத் தணிவிற் றிருக்கும் மன்னவன் போல மற்றவை சூழ்தர மதர்த்து நிற்கும் மற்றொன் றொருபால் நிரல்பட அரிவையர் நின்று நடம்புரி செயலெனப் பெரியவும் சிறியவும் ஆகி ஆடி அசைகரும் அழகினை ஒருடால் நாடி விழியால் நலம்துகர்த் திருந்தேன். அடுத்து இந்தக் காட்சிகளைப் படைத்த தொழிலாளர்களை வாழ்த்துகின்றார் முடியரசன். உழைப்பைப் போற்றும் அந்த உத்தமக் கவிஞர் தொழிலாளி என்ற தலைப்பில் கண்ட நான்கு கவிதைகளில் ஒன்று இது. ஆடையிலே அழுக்ககற்றித் துய்மை ஆக்கி அழகுசெய்து தருகின்றான், பொலிவு குன்றத் தாடையிலே வளருமதை வழித்தெ றிந்து தளிர்க்கின்ற முடிவெட்டி அழகு செய்வோன், கோடையிலே வருந்தாமல் முள்ளால் கல்லால் கொடுமையொன்றும் நேராமல் தடுப்ப தற்குச் சோடையின்றிச் செருப்பளிப்போன் இவர்க ளெல்லாம் தொடக்கூடாச் சாதியென்றால் தொலைக வையம். சீற்றம் காட்டுகின்றார். தொழிலாளர்களைக் கிழங்கென்றும், கீரையென்றும் எண்ணிக் கீழாக்கிவிட்டநிலையை ஒழிக்க வீரம் மிக்க இளைஞர்களைக் களங்கான வருமாறு தட்டி எழுப்பிகின்றார். இவர் இதில் தொழிலாளர்கள் மீது இரக்கம் காட்டி முதலாளி சமூகத்தின் மீது