பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் முடியரசன் 25 ~్య +. *. & * > * * பொதுவுடைமைக் கொள்கையிலும் அழுத்தமான பற்றுடையவர். இதனை, நிலவு பற்றிப்பாடிய பாட்டொன்றில் காணலாம். பொதுவுடைமை ஆட்சியினை இரவுப் போதில் புரிகின்ற முழுமதியே உன்னைக் கண்டு மதுவுண்ட வண்டானேன், இப்படிப் பொதுவாக இவர் கவிதையில் ஆழ்ந்த தமிழ்ப் பற்று. ஏழைகளின் மீது இரக்கம், துன்பத்திலும் இன்பத்தைக் காட்டும் நகைச்சுவை, நாட்டன்பு முதலிய அரிய பண்புகளைக் கண்டு மகிழலாம். சான்றோர்கள். திருத்தொண்டத் தொகையைப் பாடி அடியார் வழிபாட்டைத் தொடங்கி வைத்தவர் சுந்தர மூர்த்தி அடிகள். "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று இறைவனாலேயே அடியெடுத்துக் கொடுக்கப் பெற்ற திருத்தொண்டத் தொகை இவ்வாறு தொடங்குகின்றது. இதனைத் தொடர்ந்து நம்பியாண்டார் நம்பி பாடிய 100 பாடல்கள் அடங்கிய, திருத்தொண்டர் அந்தாதியை விரித்துப் பாடவழியாக அமைகின்றது. பின்னர் சேக்கிழார் பெருமான் அவர்களால் பக்திச்சுவை நனிசொட்டும் திருத்தொண்டர் புராணம் பெரிய புராணம் மேலும் விரிந்தது. இந்தத் தம்பிரான் தோழரின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய பாரதியார் காந்தியடிகள்,தாதாபாய் நவுரோஜி, திலகர், லாலா லஜபதிராய், வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற விடுதலைத் தொண்டர்களைப் போற்றினார். தொடர்ந்து, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வாழ்த்துப் பாடல்களாகவும் இரங்கற் பாக்களாகவும் பல தொண்டர்களைப் பாடியுள்ளார். இவரது பாடல்களில் தேசத்தொண்டர்கள், கவிஞர்கள், வள்ளல்கள், இசையரசர்கள் போன்ற பல பெரியோர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் யாவரும் பாவேந்தர், உலகப் பெரியோர்கள், நாட்டுப் பற்றாளர்கள், அறிஞர்கள், வள்ளல்கள், துணைவேந்தர்கள், புலவர்கள்.நூல்வெளியீட்டாளர்கள், நடிகர்கள் முதலியோர்களைப் பாட வழிகாட்டிகளாய் அமைந்தனர். - இவர்கள் அனைவரும் இம்முறையில் தொண்டாற்றக் கவிஞர் முடியரசனுக்கு வழிகாட்டிகளாக அமைந்து அவர் மொழித் தொண்டர்களான கவிமணி, பாரதிதாசன் , திரு.வி.க. கா.அப்பாத்துரை, மயிலை சிவமுத்து, சொ. முருகப்பா என்பவர்களைப் பாட