பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் முடியரசன் 27 அண்ணலுன்போல் பன்மொழியில் புலவர் என்போர் ஆருள்ளார் தமிழ்காக்க அதனா லன்றோ கண்ணியத்தால் உயர்தமிழ்த்தாய் தீங்கு வந்தால் கா அப்பா துரைமகனே என்று சொன்னாள். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை பற்றிய பதினொரு பாடல்களில் இதுவும் ஒன்று. மதுரை எழுத்தாளர் மன்றச் சார்பில் நடைபெற்ற கவியரங்கத்தில் உரிமை என்ற தலைப்பில் பாடிய கவிதைகள் மிகச் சிறப்புடையவை. இவற்றுள் காஞ்சித் தென்றலாக அறிஞர் அண்ணா குறிப்பிடப் பெறுகின்றார். தென்பொதிய மலைஒன்றே தமிழர்க் காகத் தென்றலெனும் மென்காற்றை நல்கிற் றென்பார் அன்புடையீர் காஞ்சிபுரப் பேரூர் தானும் அறிஞரென்ற தென்றலொன்றை நல்கக் கண்டோம் வன்புடைய வாடைவரின் பொதியத் தென்றல் வாயடங்கும் இத்தென்றல் வாடை காணில் தென்புடைய புயலாகிப் பகையை மாய்க்கும் தெருவெல்லாம் மணம்பரப்பும் வாழ்க தென்றல் இதில் தென்றல் புயலாவதைக் காண்கின்றோம். அக்காலத்தில் இருந்தவர்கள் நேரில் இதனைக் கண்டிருப்பர். அடுத்து கட்டிவந்த பொருள்விற்க ஆங்கி லத்தார் கடல்கடந்து நுழைந்திங்கு தம்மைத் தாமே முட்டவிட்டுத் தந்திரமாய்க் கவர்ந்து நாட்டின் முழுஉரிமை கைக்கொண்டார் அடிமை யாகிக் கெட்டிருக்கும் மாந்தரிலே காந்தி தோன்றிக் கிளர்ந்தெழுந்தார் அயலவர்கள் நாட்டை யாள விட்டிருந்த நிலைபோலும் எனக்க னன்று வீரப்போர் தொடுத்துமேன் உரிமை வேட்கை? என்ற பாட்டு காந்தியடிகளைக் காட்டுவதாகும். தொடர்ந்து, முத்திருக்கும் தண்கடலில் முத்தெ டுத்து முகில்முட்டும் மலையகத்துச் சந்த னத்தின்