பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் முடியரசன் 29. காட்டும் எண்ணம், தமிழறிந்து மதிக்கும் எண்ணம், என்பவையாகும். புலவர்பெருஞ் சித்திரனார் வறுமை போக்கப் புரவலர்பால் பலபரிசில் பெற்று வந்து குலமனையாள் கைக்கொடுத்து நயந்தோர் யார்க்கும் கடிமகிழ் உறவினர்க்கும் பிறர்க்கும் நல்கி நலம்நுகர நாளைக்குத் தேவை என்ற நயவாமை என்னொடும்சூ ழாமல் நல்கிச் செலவழித்து மகிழ்வோம்நாம் எனப்பு கன்றார் செல்வத்துப் பயணிதல் காட்டும் எண்ணம். சங்கப் பாடலை இளக்கி மென்மையாக்கி இக்கால மக்களின் மனத்திற்கேற்றவாறு தந்த இப்பாடல் செல்வத்துப் பயணி தலை உணர்த்துகிறது. உயர் எண்ணங்களிலே நான்கினைக் காட்டுகின்றார்.அவைசெயற்கரிய தியாக எண்ணம், மக்களைக் காக்கும் எண்ணம், உரிமை எண்ணம், நாடு தழைக்கும் எண்ணம். புந்திக்குப் பொருந்தாத கொள்கை மாய்க்கப் புரட்சிசெயும் நல்லறிஞர் தீய சொற்கள் தந்தவர்க்கும் நானும்வகை நன்மை செய்வார் தண்டாத சொல்லருவி கலையின் தேக்கம் செந்தமிழர் நாட்டுக்கு வாழ்நாளெல்லாம் சேவைசெய்வார் காஞ்சிநகர் தந்த செம்மல் பந்தமுடன் அண்ணாஎன் றழைக்கப் பெற்றார் படும்பாடு நம்நாடு தழைக்கும் எண்ணம். இது அண்ணாவின் உயர் எண்ணத்தைக் காட்டுவது. ஏனைய மூன்றும், காந்தி, காமராசர், பெரியார் என்ற மூவரின் எண்ணங்களாகும். - வேண்டாத எண்ணங்களில் விளையாடித் திரியும் எண்ணம், வால் பிடிக்கும் எண்ணம், ஆகிய இரண்டு, காட்டப்பெறுகின்றன. இரண்டாவதில் பல எண்ணக் கோவைகளைக் காட்டுவார் முடியரசன், ஒருகுலமே உண்டெனஇவ் வுலகுக் கோதும் உயர்நாட்டில் சாதிமுறை வேண்டா எண்ணம் தெருவோடு போவாரைக் கேலி செய்யும் சிறுபுத்தி நல்லவர்க்கு வேண்டா எண்ணம்